Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: nose cut

எட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகள்; முதல்வருக்கு மூக்குடைப்பு!

எட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகள்; முதல்வருக்கு மூக்குடைப்பு!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு 11 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில், சேலத்தில் கிளர்ந்தெழுந்த விவசாயிகள் இத்திட்டத்துக்கு எதிராக ஆட்சேபனை மனு அளித்து, முதல்வருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.   பாரத்மாலா பரியோஜனா:   சேலம் முதல் சென்னை வரை 'பாரத்மாலா பரியோஜனா' என்ற பெயரில், எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இந்த சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக அமைகிறது. இதற்காக மேற்சொன்ன மாவட்டங்களில் இருந்து மொத்தம் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக கடந்த மே மாதம் நிலம் அளவீடு செய்யச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கடும் தெரிவித்தனர்.  
பொய் செய்தி விவகாரம்: பணிந்தார்  நரேந்திர மோடி!; ஸ்மிருதிக்கு மூக்குடைப்பு!!

பொய் செய்தி விவகாரம்: பணிந்தார் நரேந்திர மோடி!; ஸ்மிருதிக்கு மூக்குடைப்பு!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பொய் செய்திகள் வெளியிடும் ஊடகத்தினரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற நடுவண் அமைச்சர் ஸ்மிருதி இராணியின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு, அந்த உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்தார். நடுவண் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஸ்மிருதி இராணி, பொய் செய்திகள் வெளியிடும் பத்திரிகை, செய்தி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடக செய்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று (ஏப்ரல் 2, 2018) திடீரென்று ஓர் உத்தரவை பிறப்பித்தார். போலி செய்திகள் வழங்கிய குற்றம் முதல்முறையாக நடந்திருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட செய்தியாளரின் தேசிய அங்கீகாரம் (National Accreditation) 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்றும், இரண்டாவது முறையாக அதே குற்றம் நடந்திருப்பது தெரிய வந்தால் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவிட
‘பானி பூரி’ கருத்து: மூக்குடைபட்ட ஹெச்.ராஜா!

‘பானி பூரி’ கருத்து: மூக்குடைபட்ட ஹெச்.ராஜா!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கில் வாதாட, வட இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வந்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்ததற்கு, அவரை இணையவாசிகள் சமூகவலைத்தளங்களில் சரமாரியாக மூக்குடைத்திருக்கிறார்கள். கடந்த சில நாள்களாகவே குண்டர் சட்டம், திருமுருகன் காந்தி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் என்று கொஞ்சம் சீரியஸான கட்டுரைகளையே எழுதி வந்தோம். சரி...நம்மையும், மற்றவர்களையும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்கலாமே என்று தோன்றியது. அப்படியே டுவிட்டர் பக்கத்தில் மேய்ந்தபோது, ஓர் அரசியல் பிரபலத்தை நெட்டிஸன்கள் சகட்டுமேனிக்கு 'வெச்சி' செய்திருப்பது தெரியவந்தது. வடிவேல் பாணியில் சொல்லணும்னா, ''எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான். இவன் ரொம்ப நல்லவன்னு'' சொல்லும் அளவுக்கு போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லோரும் ஃபோன் போட்டு அடிச்சி துவைத்திருக்கிறார்கள். வெயிட் வ