Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘பானி பூரி’ கருத்து: மூக்குடைபட்ட ஹெச்.ராஜா!

தமிழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கில் வாதாட, வட இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வந்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்ததற்கு, அவரை இணையவாசிகள் சமூகவலைத்தளங்களில் சரமாரியாக மூக்குடைத்திருக்கிறார்கள்.

கடந்த சில நாள்களாகவே குண்டர் சட்டம், திருமுருகன் காந்தி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் என்று கொஞ்சம் சீரியஸான கட்டுரைகளையே எழுதி வந்தோம். சரி…நம்மையும், மற்றவர்களையும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்கலாமே என்று தோன்றியது. அப்படியே டுவிட்டர் பக்கத்தில் மேய்ந்தபோது, ஓர் அரசியல் பிரபலத்தை நெட்டிஸன்கள் சகட்டுமேனிக்கு ‘வெச்சி’ செய்திருப்பது தெரியவந்தது.

வடிவேல் பாணியில் சொல்லணும்னா, ”எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான். இவன் ரொம்ப நல்லவன்னு” சொல்லும் அளவுக்கு போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லோரும் ஃபோன் போட்டு அடிச்சி துவைத்திருக்கிறார்கள். வெயிட் வெயிட்…இதெல்லாமே டுவிட்டரில். நேரில் அல்ல. நேரில் சிக்காதது அவரின் அதிர்ஷ்டமாகக்கூட இருக்கலாம். இப்படி சொல்வதென்றால் நாம் ஒன்றும் ‘ஆன்டி இண்டியன்’ ஆகி விட மாட்டோம்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்கவும், அதன் மூலமாக ஹிந்தியை கட்டாயமாக்கும் முயற்சிகளிலும் நடுவண் பாஜக அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. காவி கும்பலின் இத்தகைய முயற்சிகளுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தேவைப்பட்டால் மீண்டும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கப்படும் என்றும் பகிரங்கமாகவே மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் திமுக, அதிமுகவின் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர் ந்து இருந்தனர்.

இந்த வழக்கு நேற்று (செப். 20) விசாரணைக்கு வந்தது. திமுக, அதிமுக, டிடிவி தரப்பு சார்பில் வட இந்திய வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். அதில் ஓரிருவர் காங்கிரஸ்காரர்கள்.

தமிழக வழக்கறிஞர்களுக்கு ஆங்கிலம், ஹிந்தி மொ-ழிப்புலமை இருக்காது என்பதை குறிக்கும் விதமாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ”திமுகவிற்கு கபில்சிபல், டிடிவிக்கு சல்மான் குர்ஷித், அதிமுகவிற்கு முகுல் ரோத்தகி. இவர்கள் உயர்நீதிமன்றத்தில் பானி பூரி விற்க வந்தார்களா?,” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கேலியாக விமர்சனம் செய்திருந்தார்.

இதனால் பொங்கி எழுந்த நெட்டிஸன்கள் டுவிட்டரில் உடனக்குடன் ஹெச்.ராஜாவுக்கு சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளனர். டான்ஸ் மாஸ்டர் கலாவின் ஸ்டைலில் சொல்வதென்றால், ஹெச்.ராஜாவை இணையவாசிகள் சும்மா ‘கிழி கிழி கிழினு’ கிழித்து தொங்கவிட்டுள்ளனர். ஹெச்.ராஜாவை மட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோரையும் கருகிப்போகும் அளவுக்கு வறுத்தெடுத்துள்ளனர்.

”நீ ‘ஹெச்’ ராஜா இல்ல. தமிழ்நாட்டுக்கு வந்த ‘ஹெச்.ஐ.வி.’ ராஜா,” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசனை ஹெச்.ராஜா ஒருமுறை, ‘முதுகெலும்பற்ற கோழை கமல்’என்று விமர்சித்து இருந்தார். அதிலிருந்து எலும்பு முறிவு மருத்துவர் என்று கமல்ஹாசனும் ஹெ.ராஜாவை அடைமொழியிட்டு குறிப்பிட்டு வந்தார். கமலின் அடைமொழியை நினைவூட்டும் வகையில் சிலர், ‘மிஸ்டர் எலும்பு முறிவுக்கு இவ்வளவு அறிவு இருக்கா?’ என்றும் ஹெச்.ராஜாவை கிண்டலாக கேள்வி கேட்டு டுவீட் செய்துள்ளனர்.

‘தமிழ்நாட்டுக்கு ஷர்மா எப்படி வந்தாரு? பீடா கடை வைக்கவா?’ என்றும் நக்கலாக கேட்டுள்ளனர். ‘ஏற்கனவே பானி பூரி விற்ற அனுபவம் போலருக்கு. அதான் இவருக்கு தெரிகிறது, உயர்நீதிமன்றம் பானி பூரி விற்கும் இடம் என்று’ எனவும் பதிவிட்டுள்ளனர். இன்னொருவர், ‘நீ கூட தமிழகத்திற்கு பஞ்சம் பொழைக்க வந்த பிச்சைக்கார வந்தேறி ஷர்மாதானே’ என்றும் கேட்டுள்ளனர்.

‘அப்போ மோடி தமிழ்நாட்டுக்கு ஓட்டு கேட்க வரல. பானி பூரி விற்கத்தான் வந்தாரா?’ என்றும், மக்களவையில் மோடி சற்று கண் அயர்ந்ததை கிண்டல் செய்யும் விதமாக, ”அதாவது ஹே, பாராளுமன்றத்தில் தூங்கலாம் ஹே. ரயிலில் நீ தூங்கக் கூடாது ஹே. இந்தியா ஜனநாயக நாடு ஹே,” என்று பிரதமரையும் சந்தடி சாக்கில் நெட்டிஸன்கள் கிண்டலடித்துள்ளனர்.

பிரதமர் மோடியை, ”56 இன்ச், இந்தியாவோட ஜிடிபி-ஐ 5.7 சதவீதத்திற்கு சரிச்சிடிச்சாம்…” என்றும் கேலி செய்துள்ளனர்.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அறிவித்தால் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று ஹெச்.ராஜா சொல்லி இருந்தார். அதையும் நெட்டிஸன்கள் விட்டு வைக்கவில்லை. அதற்கு ஒருவர், ”அய்யா, யாராவது ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிங்க மக்களே. நான் என் சொத்தை வித்தாவது பண உதவி செய்கிறேன்,” என்று கிண்டல் செய்துள்ளார்.

சாரணர் இயக்கத் தேர்தலில் வெறும் 52 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்த ஹெச்.ராஜாவை, அந்த சம்பவத்தோடு ஒப்பிட்டும் டுவிட்டரில் பலர் கிண்டலாக விமர்சனம் செய்துள்ளனர். ‘திருப்பதி தேவஸ்தானம் மயிர் ஏலம் விட தலைவர் தேர்தல் நடத்துறாங்கலாம். போய் போட்டிபோடு போ…’ என்றும் பதிவிட்டுள்ளனர். டுவிட்டரில் பலரும் ராஜாவின் இனிஷியல் ‘ஹெச்’ என்பதை ‘எச்ச’ என்று குறிப்பிட்டும் பதிலடி கொடுத்துள்ளனர்.

”டீ விற்றவர் பிரதமரா வந்தாருனு பெருமைப்படுற நீங்க, வழக்காட வந்தவர்களை பானி பூரி விற்கச் சொல்வது தக்காளி சட்னி மொமென்ட்,” என்று ஒருவர் பதிவிட்டு இருந்தார். அது சற்று நக்கலாக தோன்றினாலும், காவி கும்பல் சிந்தனையில் ஏற்றிக்கொள்ள வேண்டிய பதிவு.

அரசியலில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எவரும் இலர். எல்லா கருத்துக்கும் இங்கே மாற்றுக்கருத்துகள் உண்டு. ஹெச்.ராஜா பற்றி இணையவாசிகள் பதிவிட்ட பல கருத்துகள் நாகரீகமற்றதாக இருந்தன. நாகரீகம் கருதி நாம் அவற்றை இங்கே குறிப்பிடவில்லை. என்னதான் ஒருவர் 52 ஓட்டுகள் மட்டுமே பெற்று, தோற்றுப்போனாலும் அதற்காக அவரை, ‘இந்நேரம் நீ தொங்கி இருக்கணும்’ என்பதெல்லாம் ஓவர்.

கோவையில் காவி கோஷ்டியைச் சேர்ந்த யாரோ சிலர் பிரியாணி அண்டாவை தூக்கிச் சென்றனர் என்பதற்தாக, ”டேய் தெருப்பொறுக்கி. அண்டா திருடா. தோற்றுப் போனாயே. இனிமேல் தமிழ்நாட்டில் தாமரை மலரும்னு பேசுவியா” என விமர்சிப்பதில் என்ன நாகரீகம் இருக்க முடியும். நாகரீகம் முக்கியம்….ம்…!

இருப்பினும், ஹெச்.ராஜாவைத் தவிர வேறெந்த அரசியல் பிரபலத்திற்கு எதிராகவும் இணையவாசிகள் இந்தளவுக்கு மோசமாக எதிர்வினையாற்றி இருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். பாஜகவின் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு இந்த மண்ணில் இடமில்லை என்பதையே, இணையவாசிகளின் கருத்தாக நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. அதை ஹெச்.ராஜா மூலமாக பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.

ராஜாவின் முன்னொட்டாக இருக்கும் ‘ஹெச்’ என்பதை, மக்கள் ‘ஹானரபுள்’ என்று மதிக்கும் அளவுக்கு அவர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இது.

– நாடோடி.