Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: NEET Examination

நீட் தேர்வில் மாபெரும் ஊழல்!: வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு

நீட் தேர்வில் மாபெரும் ஊழல்!: வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு

அரசியல், இந்தியா, கல்வி, சேலம், முக்கிய செய்திகள்
ராஜஸ்தானில் செயல்படும் தனியார் கோச்சிங் செண்டர்களும், சிபிஎஸ்இ நிர்வாகமும் சேர்ந்து கொண்டு நீட் தேர்வில் மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பகீர் புகார் கூறியுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று (மே 6, 2018) நடந்தது. முன்னதாக, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது: மனித உரிமை மீறல்: நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது. தேர்வு எழுதும் மாணவிகளின் பொட்டை அழித்து, வளையல்களை உடைத்து, பூவை பறிக்கும் கொடூர செயல்களில் சிபிஎஸ்இ நிர்வாகமும், மத்திய அரசும் ஈடுபட்டு வருகிறது. சில இடங்களில் மாணவிகளின் உள்ளாடைகளைக்கூட கழற்றி சோதனையிட்டுள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதுகுறித்து தே
சபரிமாலா: சாதனையாளர்களை உருவாக்கும் ‘ஒன் உமன் ஆர்மி’

சபரிமாலா: சாதனையாளர்களை உருவாக்கும் ‘ஒன் உமன் ஆர்மி’

அரியலூர், கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, திண்டுக்கல், மதுரை, முக்கிய செய்திகள், விழுப்புரம்
அனிதா மரணம், அதைத்தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் கிளர்ச்சி, இவற்றுக்கிடையே ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஒற்றை மனுஷியாக ஈர்த்து இருப்பவர், ஆசிரியை சபரிமாலா. கடந்த சில நாள்கள் முன்பு வரை திண்டிவனம் வைரபுரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை. இப்போது நீட் எதிர்ப்புப் போராளி. மட்டுமல்ல. சமத்துவக்கல்விக்கான போராளியும்கூட. ஆசிரியை பணியை ராஜினாமா செய்தவர் என்ற அளவில்தான் அவர் பெயர் வெளியே தெரிகிறது. ஆனால், அதற்கு முன்பே அவர் ஆயிரம் பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் உள்ளனர். பேச்சாளர். பட்டிமன்ற நடுவரும்கூட. தன் மகனை அரசுப்பள்ளியில் சேர்த்து, செயல்வீரராகவும் இருக்கிறார். இவருடைய கணவர் ஜெயகாந்தன், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட செயல்கள் எதுவுமே கிடையாது. சபரிமாலாவின் பணித்துறப்பின் மீதும் சில எதிர்மறை விமர்சனங்கள் வரவே செய்கின்றன. தனியார் தொலைக்காட்சி
நீட் தேர்வுக்கு கமல் சொன்ன தீர்வு!

நீட் தேர்வுக்கு கமல் சொன்ன தீர்வு!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கல்விக்கொள்கை வகுக்கும் உரிமை மாநில அரசுகளின் வசம் கொண்டு வந்தால், நீட் தேர்வு பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைத்துவிடும் என்று நடிகர் கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு போன்ற சமகால பிரச்னைகள் குறித்து டிவிட்டர் பக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார். விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையை, அவ்வப்போது அரசியல் விமர்சன கருத்து சொல்லும் தளமாகவும் பயன்படுத்தி வருகிறார். கடந்த வார நிகழ்ச்சியின்போது, 'நான் இனி அரசியல்வாதிகளை வெளியில் இருந்து விமர்சிக்கவோ நக்கல் செய்யவோ முடியாது. எனக்கு இனி முகமூடி தேவையில்லை,' என்றுகூறி, அரசியல் களத்தில் இறங்கி விட்டதை வெளிப்படையாகவே சொன்னார். அந்த மேடையில், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு இரங்கலும் தெரிவித்தார். திங்கள்¢ முதல் வெள்ளிக்கிழமை வரை களைகட்டாத பிக்பாஸ் ந
நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

கல்வி, கோயம்பத்தூர், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, திருவாரூர், முக்கிய செய்திகள், விழுப்புரம்
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பரவலாக மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. உள்கட்சி பிளவுகளால், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவே தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழக அரசு, போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் கையறு நிலையில் இருக்கிறது. முத்துக்குமார், செங்கொடி ஆகியோரின் உயிர் தற்கொடைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதேபோல், மருத்துவப் படிப்பு கானலான விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணம் காரணமாக, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. கடந்த சில நாள்களாகவே வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக 'மெரீனாவில் ஒன்றுகூடுவோம்' என்ற பெயரில் தகவல்கள் பரவின. இதனால் உஷார் அடைந்த தமிழக காவல்துறை, மெரீனா கடற்கரையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. கடற்கரை பகுதியில் குழுக்களாக சுற்றுவோ