Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: murder

மசாஜ் அழகி கொலை: சஸ்பெண்ட் போலீசாரில் இருவருக்கு ‘வெண்ணெய்’; இருவர் கண்ணில் ‘சுண்ணாம்பு’! கமிஷனரின் பாரபட்சம் ஏன்?

மசாஜ் அழகி கொலை: சஸ்பெண்ட் போலீசாரில் இருவருக்கு ‘வெண்ணெய்’; இருவர் கண்ணில் ‘சுண்ணாம்பு’! கமிஷனரின் பாரபட்சம் ஏன்?

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், படுகொலை செய்யப்பட்ட மசாஜ் அழகியுடனும், அவருடைய ரகசிய காதலனுடனும் தொடர்பில் இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு போலீசாரில் இருவரை மட்டும் பணிக்கு திரும்ப அழைத்துள்ள மாநகர காவல்துறை, எஸ்ஐ உள்ளிட்ட இருவருக்கு மட்டும் விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அளித்துள்ளது விமர்சனங்களைக் கிளப்பி உள்ளது.   சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஓர் அபார்மெண்ட்டில் தேஜ் மண்டல் (26) என்ற இளம்பெண் வசித்து வந்தார். அவர் வசித்து வந்த குடியிருப்பு, அதிமுக பிரமுகரும், சேலம் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான நடேசனுக்குச் சொந்தமானது. தேஜ் மண்டல், சேலத்தில் சங்கர் நகர், அங்கம்மாள் காலனி ஆகிய இடங்களில் 'தேஜாஸ் ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் மையங்களை நடத்தி வந்தார். தான் வசித்து வந்த வீட்டிற்குக் கீழ் தளத்தில் இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தன்னிடம் வேலை செய்து வந்த ரிஷி, நிஷி,
மசாஜ் அழகி கொலை: பலிகடாவான 4 போலீசார்! யாரை காப்பாற்ற நாடகம் ஆடுகிறது சேலம் காவல்துறை?

மசாஜ் அழகி கொலை: பலிகடாவான 4 போலீசார்! யாரை காப்பாற்ற நாடகம் ஆடுகிறது சேலம் காவல்துறை?

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் கொல்லப்பட்ட மசாஜ் அழகியுடன் தொடர்பில் இருந்ததாக மூன்று எஸ்ஐக்கள் உள்ளிட்ட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக உளவுப்பிரிவு உதவி கமிஷனர், 2 பெண் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் மாநகர காவல்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன். அதிமுக பிரமுகர். இவருக்குச் சொந்தமான அபார்ட்மெண்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார் தேஜ் மண்டல். 26 வயதான இவர், சேலம் சங்கர் நகர், பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் 'தேஜாஸ் ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் செண்டர்களை நடத்தி வந்தார்.   தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில், பக்கத்திலேயே இன்னொரு அறை எடுத்து, அதில் தன்னிடம் வேலை செய்து வந்த ரிஷி, நிஷி, ஷீலா ஆகிய 3 பெண்களையும், லப்லு என்ற ஆணையும் தங்க வைத்திருந்தார். தேஜ் மண்டல் உள்பட இவர்கள்
இபிஎஸ் தொகுதியில் அதிகாலையில் பயங்கரம்! மகளை சுத்தியலால் தாக்கி கொன்ற காய்கறி வியாபாரி; மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை!

இபிஎஸ் தொகுதியில் அதிகாலையில் பயங்கரம்! மகளை சுத்தியலால் தாக்கி கொன்ற காய்கறி வியாபாரி; மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை!

சேலம், முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதிக்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் அருகே, பெற்ற மகளை தந்தையே சுத்தியலால் தாக்கிக் கொலை செய்தார். ஊர் மக்கள் கூடியதை அறிந்து அவரும் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள மணியகாரம்பாளையம் ஆதிகாட்டுரைச் சேர்ந்தவர் கோபால் (54). உள்ளூரில் தள்ளுவண்டி மூலம் காய்கறி விற்று வந்தார். இவருடைய மனைவி மணி. இவர்களுக்கு பிரியா (15) என்ற மகள் இருந்தார். அவர், தாதாபுரம் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுக்கு ரமேஷ்கண்ணன் என்ற மகனும் இருக்கிறார். கோபாலின் மனைவி மணி, கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. அடிக்கடி வேலைக்காக வெளியூருக்குச் சென்று விடுவார். மகன் ரமேஷ்கண்ணன், செட்டிமாங்குறிச்சியில் உள்ள ஒரு பேக்கரி
சேலம் கல்லூரி மாணவர் கொலை! அதிமுக எம்எல்ஏவிடம் தஞ்சம் அடைந்த கூலிப்படை! கூடா நட்பு கேடாய் முடிந்த பின்னணி!!

சேலம் கல்லூரி மாணவர் கொலை! அதிமுக எம்எல்ஏவிடம் தஞ்சம் அடைந்த கூலிப்படை! கூடா நட்பு கேடாய் முடிந்த பின்னணி!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிதீர்க்கும் விதமாக அடுத்தடுத்து மேலும் சில அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்ற தகவலால் ஒரு கிராமமே திகிலடைந்து கிடக்கிறது.   சேலம் சீலநாய்க்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி வசந்தி. கூலித்தொழிலாளிகளான இவர்களின் ஒரே மகன் திலீப்குமார் (19). நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் இறுதியாண்டு படித்து வந்தார். செப்., 5ம் தேதியன்று இரவு 7 மணியளவில் தன் நண்பர்களைச் சந்தித்துவிட்டு வருவதாக அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து 20 அடி தூரம் நடந்து சென்ற அவரை வழிமறித்த ஒரு கும்பல் கொடூரமாக குத்திக் கொன்றிருக்கிறது. மகனை யாரோ சிலர் மிரட்டியபடியே, 'அவன இங்கேயே போட்டுத்தள்ளுங்கடா...' என்றுகூற, வீட்டில் இருந்து
ஆத்தூர்: பள்ளி மாணவியை கொன்ற கொடூரன் அந்நியன் விக்ரம் போல மாறி மாறி பேசுவதால் போலீசார் திணறல்!

ஆத்தூர்: பள்ளி மாணவியை கொன்ற கொடூரன் அந்நியன் விக்ரம் போல மாறி மாறி பேசுவதால் போலீசார் திணறல்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ஆத்தூர் அருகே, இரவு நேரத்தில் வீடு புகுந்து பள்ளி மாணவியை துடிக்க துடிக்க தலை துண்டித்துக் கொலை செய்த கொடூரன், அந்நியன் விக்ரம் போல மாற்றி மாற்றி பேசுவதால் வாக்குமூலம் பெறுவதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.   ஆத்தூர் அருகே...   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி சுந்தரபுரம் தெற்குக் காட்டைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் மகன் தினேஷ்குமார் (25). இரண்டாவது மகன், சசிகுமார். மூத்த மகன் தினேஷ்குமார், நெல் அறுக்கும் இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவயும், இரண்டரை வயதில் செல்வதரணித் என்ற ஓர் ஆண் குழந்தை உள்ளனர்.   இவர்கள் வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் சாமிவேலு - சின்னப்பொண்ணு (45) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜலட்சுமி (14) என்ற மகள் இருந
தேமுதிக பிரமுகரை போட்டுத்தள்ளிய நயன்தாரா ரசிகர்கள்! முதல் கொலைக்கு 500 ரூபாய் கூலி; சிறார் குற்றவாளியின் திடுக் பின்னணி!!

தேமுதிக பிரமுகரை போட்டுத்தள்ளிய நயன்தாரா ரசிகர்கள்! முதல் கொலைக்கு 500 ரூபாய் கூலி; சிறார் குற்றவாளியின் திடுக் பின்னணி!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள், விழுப்புரம்
  சேலம் அருகே, நடந்து முடிந்த தேமுதிக பிரமுகர் படுகொலையின் பின்னணியில் , சமூகத்தை உறைய வைக்கும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.   சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புத்தூர் வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (42). விவசாயி. சொந்தமாக டாடா ஏஸ் சரக்கு வாகனமும் ஓட்டி வந்தார். தேமுதிக கட்சியில் சில ஆண்டுகள் கிளை செயலாளராகவும் இருந்தார். இவருடைய மனைவி ஆலயமணி (32). இவர்களுக்கு 17 மற்றும் 15 வயதுகளில் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 17, 2018ம் தேதியன்று இரவு 10 மணியளவில் தன் மனைவி ஆலயமணி, மகன்கள் இருவரையும் திருநள்ளாறு கோயிலுக்குச் செல்வதற்காக வாடகை காரில் ஏற்றி, வழியனுப்பி வைத்தார் கலியமூர்த்தி. அடுத்த சில மணி நேரங்களில் தனக்கு நேரப்போகும் விபரீதம் குறித்து அப்போது அவர் சற்றும் அறிந்திருக்கவில்லை.   'எப்போதும்போல வாசலில் படுத்துத்தூங்காமல
நாடி, நரம்பு, புத்தி என கொலைவெறி ஊறிக்கிடக்கும் தஷ்வந்த்!:  திடுக்கிடும் வாக்குமூலம்

நாடி, நரம்பு, புத்தி என கொலைவெறி ஊறிக்கிடக்கும் தஷ்வந்த்!: திடுக்கிடும் வாக்குமூலம்

குற்றம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை, பணத்திற்காக தாய் படுகொலை என அடுத்தடுத்த குற்றத்தில் ஈடுபட்டு வந்த தஷ்வந்த், பெற்ற தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை போரூரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த பிப்ரவரி மாதம், 7 வயதே ஆன ஹாஸினி என்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்டாள். சந்தேகம் வராமல் இருக்க, சடலமும் எரிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் என்ற இளைஞர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். பின்னர் பிணையில் வெளியே வந்த அவர், பெற்ற தாயென்றும் பாராமல் பணம் நகைக்காக தாய் சரளாவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு மும்பைக்குக் தப்பி ஓடினார். சூதாட்ட பிரியரான தஷ்வந்த், மும்பையில் குதிரை பந்தயம், சீட்டாட்டம் என்று பொழுதைக் கழித்து வந்த நிலையில், தமிழக தனிப்படை காவல்துறையினரால்
தீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம்

சினிமா, சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, புதிய கதைக்களத்துடன் வந்திருக்கும் படம்தான் 'தீரன் அதிகாரம் ஒன்று'. தனியாக இருக்கும் வீடுகளைக் குறிவைத்து கொலை, கொள்ளையில் ஈடுபடும், பல ஆண்டுகளாக காவல்துறைக்கு தண்ணீ காட்டி வரும் ஒரு கும்பலை வேட்டையாடுவதுதான் படத்தின் ஒன் லைன். நடிகர்கள்: கார்த்தி, ரகுல் பிரீத் சிங், 'போஸ்' வெங்கட், அபிமன்யூ சிங், மனோபாலா, சத்யன் மற்றும் பலர். இசை - ஜிப்ரான். ஒளிப்பதிவு - சத்யன் சூரியன். தயாரிப்பு - ட்ரீம் வாரியர்ஸ். இயக்கம் - ஹெச்.வினோத். 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஹெச்.வினோத் இயக்கத்தில் இன்று (நவம்பர் 17, 2017) வெளியாகி இருக்கிறது 'தீரன் அதிகாரம் ஒன்று'. தொடர் குற்றத்தில் ஈடுபடும் ஒரு கும்பலை, ஒரு காவல்துறை அதிகாரி எப்படி பிடிக்கிறார்?, அதற்காக அவர் சந்திக்கும் இழப்புகள், சறுக்கல்கள், முயற்சிகள் என்னென்ன என்பதை ஆக்ஷன் திரில்லர் கலந்து பர
விடுதலைப்புலிகளின் லட்சிய நெருப்பு தமிழ்ச்செல்வன்!

விடுதலைப்புலிகளின் லட்சிய நெருப்பு தமிழ்ச்செல்வன்!

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரமரணம் அடைந்து இன்றுடன் (நவம்பர் 2, 2017) பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், உலகத்தமிழர்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். தமிழ்ச்செல்வன் யார்? விடுதலைப்புலிகள் இயக்க செயல்பாடுகள் மீது பற்றுகொண்டு, தன்னுடைய 17வது வயதில் இயக்கத்துடன் இணைத்துக் கொண்ட சு.ப.தமிழ்ச்செல்வன், இலங்கையின் கிளிநொச்சியைச் சேர்ந்தவர். எனினும், இயக்கத்தில் இணைந்த பிறகு, யாழ்ப்பாணமே அவருடய களமானது. இலங்கை அரச பயங்கரவாதத்தின் சதியால் வான்வெளி ராணுவக் குண்டு வீச்சில் 2.11.2007ம் தேதி காலை 6 மணியளவில் தமிழ்ச்செல்வன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். அவர் மரணிக்கும் வரை கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்காக நெஞ்சுரத்துடன் உழைத்த முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராகவே விளங்கினார், தமிழ்ச்செல்வன். துவக்கத்தி