Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: background music

இளையராஜாவை அவமதித்த நாளிதழை காறி துப்பிய நடிகை கஸ்தூரி!; ட்விட்டரில் குவியும் பாராட்டு

இளையராஜாவை அவமதித்த நாளிதழை காறி துப்பிய நடிகை கஸ்தூரி!; ட்விட்டரில் குவியும் பாராட்டு

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்தது குறித்த செய்தியை, அவரின் சாதி பெயரைச் சேர்த்து தலைப்புச் செய்தியாக வெளியிட்ட நாளிதழை நடிகை கஸ்தூரி காறி உமிழும் வீடியோ பதிவுக்கு, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய திரையுலகில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவருடைய பாடல்களுக்காகவே பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இன்றுவரை பின்னணி இசையில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. இளையராஜாவை, இசைக்கடவுளாகவே கருதும் வெறிபிடித்த ரசிகர்களும் உண்டு. அவரின் திரையுலக சாதனையைக் கவுரவிக்கும் வகையில் நடுவண் அரசு, நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்படும் என, கடந்த 25ம் தேதி அறிவித்தது. அடுத்த நாள் (ஜனவரி 26, 2018) காலை பத்திரிகைகளில் இதுதான் தலைப்ப
களவாடிய பொழுதுகள் – சினிமா விமர்சனம்

களவாடிய பொழுதுகள் – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அய்ங்கரன் இன்டர்நேஷனல் சார்பில் கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் தயாரிப்பில் பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்னர் ஒருவழியாக இன்று (டிசம்பர் 29, 2017) வெளியாகி இருக்கிறது 'களவாடிய பொழுதுகள்'. நடிப்பு: பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா, இன்பநிலா, கஞ்சா கருப்பு, சத்யன், சிறுமி ஜோஷிகா மற்றும் பலர்; இசை: பரத்வாஜ்; இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு: தங்கர் பச்சான். கதைக்கரு: உயிருக்கு உயிராக காதலிக்கும் காதலர்கள் சூழ்நிலை காரணமாக பிரிய நேரிடுகிறது. காதலன் வேறு பெண்ணையும், காதலி வேறு ஆணையும் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனர். எதிர்பாராத விதமாக முன்னாள் காதலர்கள் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களே களவாடிய பொழுதுகள் படத்தின் மையக்கதை. களவாடிய பொழுதுகள் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் கடந்த 2010ம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. எனினும், பல தடைகளைத் தாண்டி ஏழு ஆண்
தீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம்

சினிமா, சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, புதிய கதைக்களத்துடன் வந்திருக்கும் படம்தான் 'தீரன் அதிகாரம் ஒன்று'. தனியாக இருக்கும் வீடுகளைக் குறிவைத்து கொலை, கொள்ளையில் ஈடுபடும், பல ஆண்டுகளாக காவல்துறைக்கு தண்ணீ காட்டி வரும் ஒரு கும்பலை வேட்டையாடுவதுதான் படத்தின் ஒன் லைன். நடிகர்கள்: கார்த்தி, ரகுல் பிரீத் சிங், 'போஸ்' வெங்கட், அபிமன்யூ சிங், மனோபாலா, சத்யன் மற்றும் பலர். இசை - ஜிப்ரான். ஒளிப்பதிவு - சத்யன் சூரியன். தயாரிப்பு - ட்ரீம் வாரியர்ஸ். இயக்கம் - ஹெச்.வினோத். 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஹெச்.வினோத் இயக்கத்தில் இன்று (நவம்பர் 17, 2017) வெளியாகி இருக்கிறது 'தீரன் அதிகாரம் ஒன்று'. தொடர் குற்றத்தில் ஈடுபடும் ஒரு கும்பலை, ஒரு காவல்துறை அதிகாரி எப்படி பிடிக்கிறார்?, அதற்காக அவர் சந்திக்கும் இழப்புகள், சறுக்கல்கள், முயற்சிகள் என்னென்ன என்பதை ஆக்ஷன் திரில்லர் கலந்து பர