Sunday, May 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சசிகலா

ஜெயலலிதா என்ன தேச விரோதியா?: நமது எம்ஜிஆர் நாளேடு கேட்கிறது!

ஜெயலலிதா என்ன தேச விரோதியா?: நமது எம்ஜிஆர் நாளேடு கேட்கிறது!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
துண்டு பிரசுரத்தில் டிடிவி தினகரன் படம் அச்சிட்டப்பட்டதற்கே தேச விரோத வழக்கு பாயுமெனில், அந்த பிரசுரத்தில் அச்சிடப்பட்டிருந்த எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரும் தேச விரோதிகளா? என நமது எம்ஜிஆர் நாளேடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஈடு இணையற்ற தலைவர்களா இல்லையா என்பது விவாதத்திற்கு உரியது. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களை சந்திக்குக் கொண்டு வருவதில் இருதரப்புமே சளைத்தவர்கள் அல்ல என்பதைத்தான் அவர்களின் அரசியல் விமர்சனங்கள் உணர்த்துகிறது. தேரை இழுத்து தெருவில் விடுவது என்பார்களே, அப்படி. சேலத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியது தொடர்பாக டிவிடி தினகரன் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் 36 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்ப
டிசம்பர் வரைக்கும்தான் எடப்பாடி ஆட்சி;  நேரம் குறித்த தினகரன்

டிசம்பர் வரைக்கும்தான் எடப்பாடி ஆட்சி; நேரம் குறித்த தினகரன்

தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
வரும் டிசம்பர் மாதத்திற்குள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விடுவோம் என்று டிடிவி தினகரன் கூறினார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக அம்மா அணி சார்பில் இன்று (அக். 15, 2017) நடந்தது. நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். பின்னர், ஊடகங்களைச் சந்தித்த அவர் கூறியது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதனை மறைத்தும், மறந்தும் விட்டு மேடை போட்டு எதை எதையோ பேசுகின்றனர். அரசு செலவில் எடப்பாடி பழனிசாமி கதை கூறிவருகிறார். இதனை பொது மக்கள் நம்ப தயாராக இல்லை. தற்போது கட்சியினர், தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் ஓபிஎஸ் யார் என்று தெரிந்து விட்டது. சட்டமன்ற கூட்ட
”அக்காவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது” – சசிகலா சாபம்

”அக்காவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது” – சசிகலா சாபம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய கணவர் நடராஜன், உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கடந்த வாரம் கல்லீரல், சிறுநீரகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த நிலையில்தான், கணவரைக் காண்பதற்காக 15 நாள்கள் அவசரகால பரோல் விடுப்பு கேட்டு சசிகலா, கர்நாடகா மாநில சிறைத்துறைக்கு விண்ணப்பித்தார். சிறைத்துறை நிர்வாகம், அவருக்கு 5 நாள்கள் மட்டும் பரோல் விடுப்பு அனுமதி வழங்கியது. கடந்த 6ம் தேதி மாலை 3 மணியளவில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அன்று இரவு சென்னைக்கு வந்து சேர்ந்தார். சிறைக்கு வெளியே கர்நாடகா அதிமுகவினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். சென்னையிலும் அவரு
சசிகலாவை வறுத்தெடுக்கும் ‘மீம்’ கிரியேட்டர்கள்!

சசிகலாவை வறுத்தெடுக்கும் ‘மீம்’ கிரியேட்டர்கள்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அவசரகால பரோல் விடுப்பில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கிண்டலடித்து நெட்டிஸன்கள் மீம்களை பதிவிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்கள் முழுவதும் சசிகலா பற்றிய மீம்களே அதிகளவில் வைரல் ஆகி வருகின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். கைதி எண்: 9234. அவருடைய கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இரு நாள்களுக்கு முன்பு, கல்லீரல், சிறுநீரகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரைக் காண்பதற்காக அவசரகால பரோல் விடுப்பில் இன்று (அக். 6) சிறையில் இருந்து விடுவிக்கப்பட
சசிகலாவுக்கு ‘வாய்ப்பூட்டு’; 5 நாள் மட்டும் ‘பரோல்’

சசிகலாவுக்கு ‘வாய்ப்பூட்டு’; 5 நாள் மட்டும் ‘பரோல்’

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சொத்து வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருடைய கணவர் நடராஜனுக்கு, சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரு நாள்களுக்கு முன் அவருக்கு கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. கணவரை காண்பதற்காக 15 நாள்கள் பரோல் விடுப்பில் செல்ல அனுமதி கேட்டு கர்நாடகா சிறைத்துறைக்கு சசிகலா விண்ணப்பித்து இருந்தார். சில தொழில்நுட்ப காரணங்களால் அப்போது பரோலில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சில ஆவணங்களும் போதிய அளவில் இல்லை என்றும் கூறப்பட்டது. இதையடுத்து மீண்டும் நேற்று புதிய பரோல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலித்த கர்நாடகா சிறைத்துறை, தமிழக காவல்துறையிடம் சசிகலாவுக்கு பரோல் அளிப்பது குறித்து கருத்து கேட்டது. அத
உறுப்பு மாற்று சிகிச்சைக்காக இளைஞர் கடத்தப்பட்டாரா?: நடராஜன் விவகாரத்தில் நடந்தது என்ன?

உறுப்பு மாற்று சிகிச்சைக்காக இளைஞர் கடத்தப்பட்டாரா?: நடராஜன் விவகாரத்தில் நடந்தது என்ன?

அரசியல், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, திருவாரூர், புதுக்கோட்டை, முக்கிய செய்திகள்
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதற்காகவே தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸில் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சசிகலாவின் கணவரும், 'புதிய பார்வை' இதழின் ஆசிரியருமான எம்.நடராஜன் (74), உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்து விட்டதாகவும், விரைவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் சில நாள்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. உறவினர்கள் வட்டாரத்தில் உறுப்பு தானம் பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடிவயலைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற 22 வயது இளைஞர், கடந்த செப். 30ம் தேதி சாலை வி
சசிகலாவுக்கு பரோல் கிடைக்காதது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

சசிகலாவுக்கு பரோல் கிடைக்காதது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சொத்து வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நாளுக்கு நாள் அவருடைய உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருபுறம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. நடராஜனை பார்ப்பதற்காக, 15 நாள்கள் பரோல் விடுப்பில் செல்ல அனுமதி கேட்டு சசிகலா சிறைத்துறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்து இருந்தார். இன்று (அக்டோபர் 3) பரோல் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பரோலில் செல்வதற்கான தகுதிகள் இல்லை என்றுகூறி சிறைத்துறை நிர்வாகம் அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. சில தொழில்நுட்ப காரணங்களால்
தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓராண்டாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து, புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹாராஷ்டிரா மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமி-ழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா உடல்நலக்குறைவு, அவருடைய மரணம், ஆளுங்கட்சியில் பிளவு போன்ற அரசியல் பரபரப்பு நிலவிய காலங்களில் நேரடி ஆளுநர் இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத நடைமுறையை நடுவண் பாஜக அரசு மேற்கொண்டது. ஒருகட்டத்தில், முதல்வர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக்கப்பட்டு, வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவரை முதல்வராக பதவியேற்க ஆளுநர் முறைப்படி அழ