Tuesday, March 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: திண்டுக்கல் சீனிவாசன்

ஏற்காட்டில் கோடை விழா, மலர்க்கண்காட்சி தொடங்கியது;  5 நாள்கள் நடக்கிறது

ஏற்காட்டில் கோடை விழா, மலர்க்கண்காட்சி தொடங்கியது; 5 நாள்கள் நடக்கிறது

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, 'ஏழைகளின் ஊட்டி', 'மலைகளின் அரசன்' என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே மாதம் கடைசி வாரத்தில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு முன்னதாகவே அதாவது மே மாதம் இரண்டாவது வாரத்திலேயே கோடை விழா நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.     அதன்படி, ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று (மே 12, 2018) தொடங்கியது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவைத் தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.     கோடை விழாவையொட்டி 24 ஆயிரம் கார்னேசன் மலர்கள், பல வண்ண ரோஜாக்கள் உள்பட ஒரு லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழ்நாடு தலைமைச் செயலக அமைப்பு, சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டதைக் குறிக்கும் ...
வடிவேலு அவதாரம் எடுக்கும் தமிழக அமைச்சர்கள்; ”பாவம் அவங்களே  கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க!”

வடிவேலு அவதாரம் எடுக்கும் தமிழக அமைச்சர்கள்; ”பாவம் அவங்களே கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க!”

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சினிமாவில் வரும் காமெடி காட்சிகளை விட நம்ம ஊர் அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சும், அசட்டுத்தனமான நடவடிக்கைகளும் நம்மை நகைச்சுவையால் திணறடிக்கின்றன என்றால் மிகையாகாது. நடிகர் விஜய் நடித்த 'காவலன்' படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு, ஏதாவது குண்டக்க மண்டக்க சொல்லிவிட்டு 'பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு' என அப்பாவியாகக் கூறுவார். அதேபோல்தான் அமைந்திருக்கிறது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சும். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ''தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்கடங்காமல் உள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து கொசுக்கள் கட்டுக்கடங்காமல் உள்ளது. அதை கட்டுப்படுத்த எய்ம்ஸ் போன்ற சிறப்பு மருத்துவர்களை அனுப்பி வையுங்கள்'' என்று சொன்னதாகக் கூறினார். https://twitter.com/twi...