எட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகள்; முதல்வருக்கு மூக்குடைப்பு!
எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு 11 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில், சேலத்தில் கிளர்ந்தெழுந்த விவசாயிகள் இத்திட்டத்துக்கு எதிராக ஆட்சேபனை மனு அளித்து, முதல்வருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.
பாரத்மாலா பரியோஜனா:
சேலம் முதல் சென்னை வரை 'பாரத்மாலா பரியோஜனா' என்ற பெயரில், எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இந்த சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக அமைகிறது.
இதற்காக மேற்சொன்ன மாவட்டங்களில் இருந்து மொத்தம் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக கடந்த மே மாதம் நிலம் அளவீடு செய்யச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கடும் தெரிவித்தனர்.
எத...