விவசாயிகள் என்ன பயங்கரவாதிகளா?; இபிஎஸ் அரசின் தலைகீழ் விகிதங்கள்!!
காஞ்சிபுரம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டுவழிச்சாலைக்கு எதிராக
கிளர்ந்தெழும் விவசாயிகளிடம்
திட்டத்தின் நோக்கம் குறித்து
வெளிப்படையாக பேச மறுக்கும் அரசு,
வெடிகுண்டு தடுப்புப்பிரிவு,
கியூ பிரிவுகள் மூலம் உளவியல் ரீதியில்
ஒடுக்குவதன் மூலம், அவர்களை
பயங்கரவாதிகளாக சித்தரிக்க
முயல்கிறதோ என்ற அய்யம்
எழுந்துள்ளது.
சேலம் முதல் சென்னை வரையில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் எட்டுவழிச்சாலை அமைப்பதற்கான வேலைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கையகப்படுத்தப்பட உள்ள தனியார் நிலங்களில் பெரும் பகுதி இருபோகம் விளைச்சலைத் தரக்கூடிய விளைநிலங்கள் ஆகும்.
இதனால் ஆரம்பத்தில் இருந்தே எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களிலும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.