Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: ஆட்சியர் ரோகிணி

சேலம்: நீட் தேர்வில் மஹாதர்ஷினி மாவட்ட அளவில் முதலிடம்!

சேலம்: நீட் தேர்வில் மஹாதர்ஷினி மாவட்ட அளவில் முதலிடம்!

கல்வி, சேலம், முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். மதிப்பெண், இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் மே 20ல் தேர்வு நடந்தது. இத்தேர்வு முடிவுகள் ஜூன் 5ல் வெளியாகின.   இத்தேர்வில், சேலம் அழகாபுரம்புதூர் ராஜாராம் நகரைச் சேர்ந்த மஹாநேருராஜ் - ராதிகா தம்பதியின் மகள் மஹாதர்ஷினி 596 மதிப்பெண்கள் பெற்று, சேலம் மாவட்ட அளவில், முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்2 முடித்த மஹாதர்ஷினி, கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் 235 மதிப்பெண்கள் பெற்றார். ஆனாலும், மருத்துவர் கன...
சேலம்: இலங்கை அகதி முகாம் சிறுமியின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சியர் ரோகிணி!

சேலம்: இலங்கை அகதி முகாம் சிறுமியின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சியர் ரோகிணி!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டியில் இலங்கை அகதிகளுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த முகாமைச் சேர்ந்த மோதிலால், அடிப்படையில் ஒரு சிற்பி. கோயில்களில் கடவுள் சிலைகளை செதுக்கி வருகிறார். என்னதான் கலை நயத்துடன் சிலை வடித்தாலும், கிடைப்பது சொற்ப கூலிதான். இவருடைய மகள் வழி பேத்தி காவினியா (13); பேரன் ரனுஷன் (14). இருவரையும் மோதிலாலும் அவருடைய மனைவி பரமேஸ்வரியும்தான் பராமரித்து வருகின்றனர்.   இந்த குழந்தைகளின் அப்பா திருமுருகன், பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. கிடைக்கின்ற கூலியை டாஸ்மாக்கிடம் கொடுத்துவிட, அதனால் மனைவி புவனேஸ்வரியுடன் அடிக்கடி தகராறு மூள, விரக்தி அடைந்த புவனேஸ்வரி குழந்தைகளை தவிக்கவிட்டு தீக்குளித்து இறந்து போனார். 2007ல் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு, குழந்தைகளை சிற்பி மோதிலால்தான் படிக்க வைத்து வருகிறார்.   சிறுமி காவினியா, தாரமங்கலத்தில் உள்ள...
சேலத்தில் ஒரே நாளில் 16 வட்டாட்சியர்கள் இடமாறுதல்; ஆட்சியர் ரோகிணி அதிரடி!

சேலத்தில் ஒரே நாளில் 16 வட்டாட்சியர்கள் இடமாறுதல்; ஆட்சியர் ரோகிணி அதிரடி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 வட்டாட்சியர்களை அதிரடியாக இடமாறுதல் செய்து ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார். நிர்வாக நலன் கருதி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக அவருடைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 1, 2018ம் தேதி முதல் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இடமாற்றம் செய்யப்பட்ட வட்டாட்சியர்கள் பின்வருமாறு...   (புதிய பணியிடங்கள் பெயர்களுக்கு நேராகவும், பழைய பணியிடங்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன). 1. அ.பெ.பெரியசாமி - சேலம் விமான விரிவாக்க தனி வட்டாட்சியர் (காடையாம்பட்டி வட்டாட்சியர்)   2. ஜி.குமரன் - ஓமலூர் (சேலம் விமான விரிவாக்க தனி வட்டாட்சியர்)   3. கே.சித்ரா - சேலம் தெற்கு தனி வட்டாட்சியர் (ஓமலூர்)   4. பி.அன்புக்கரசி - பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் (தனி வட்டாட்சியர், நி.எ அலகு-1) 5. ஜி....
சேலம்: மூதாட்டிகளை பட்டினி போட்ட கலெக்டர் ரோகிணி! அப்படி என்னம்மா கின்னஸ் ரெக்கார்டு பண்ணீட்டிங்க? #CollectorRohini

சேலம்: மூதாட்டிகளை பட்டினி போட்ட கலெக்டர் ரோகிணி! அப்படி என்னம்மா கின்னஸ் ரெக்கார்டு பண்ணீட்டிங்க? #CollectorRohini

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில், உலக கைகழுவும் தின கின்னஸ் சாதனைக்காக ஊரக வேலைத்திட்ட பெண்கள், மூதாட்டிகளை பொய்யான வாக்குறுதிகளை அளித்து, கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததுடன், காலை உணவின்றி பட்டினி போட்ட அலங்கோலங்கள் அரங்கேறியிருக்கின்றன.   ஆண்டுதோறும் அக்டோபர் 15ம் தேதி, உலக கை கழுவும் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நேற்று (அக்டோபர் 15, 2018) சேலம் சோனா பொறியியல் கல்லூரி திடலில் உலக கைகழுவும் தின கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உண்மையில் இப்படி ஒரு நிகழ்ச்சியை எந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது எனத் தெரியவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி, காலை 9.30 மணிக்கு நடைபெறும் என மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியை கால...
ஆசிரியர், மாணவிகள் உள்ளம் கவர்ந்த ஆட்சியர் ரோகிணி! காலில் விழுந்து வணங்கினார்… கேக் ஊட்டினார்… கைகுலுக்கினார்…! #CollectorRohini

ஆசிரியர், மாணவிகள் உள்ளம் கவர்ந்த ஆட்சியர் ரோகிணி! காலில் விழுந்து வணங்கினார்… கேக் ஊட்டினார்… கைகுலுக்கினார்…! #CollectorRohini

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ஆசிரியர்கள் தினத்தன்று ஒட்டுமொத்த மாணவிகள், ஆசிரியர்களின் உள்ளங்களையும் கவர்ந்து சென்றார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி.   கடந்த ஆண்டு, ஊதிய உயர்வு கேட்டு ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் இணைந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஆத்தூரில் அலுவல் நிமித்தம் சுற்றுப்பயணம் சென்றிருந்தார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி. கருமத்தம்பாளையம் அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் யாருமே இல்லாத நிலையில், குழந்தைகள் கரும்பலகையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தத் தருணத்தில் என்ன நினைத்தாரோ ரோகிணி, உடனடியாக வகுப்பறைக்குள் சென்று குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார். மற்றொரு நாள், அய்யந்திருமாளிகையில் அன்னை சத்யா பெண் குழந்தைகள் காப்பக வளாகத்தில் செயல்படும் பள்ளியிலும் அதிரடியாக ஆய்வு செய்து, குழந்தைகளுடன் வாஞ்சையுடன் கொஞ்சி மகிழ்ந்தார். இன்னொரு நாள் அரசுப்பள...
எட்டுவழிச்சாலையும் எடப்பாடி பழனிசாமியும்…  மீம்ஸ்களால் தோரணம் கட்டும் இணையவாசிகள்!

எட்டுவழிச்சாலையும் எடப்பாடி பழனிசாமியும்… மீம்ஸ்களால் தோரணம் கட்டும் இணையவாசிகள்!

சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சென்னை - சேலம் இடையிலான எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆகியோரை கேலி, கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில்  வெளியிடப்பட்டுள்ள மீம்ஸ்கள் ரொம்பவே வைரல் ஆகி வருகின்றனர்.   சென்னை - சேலம் இடையே எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டம், 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைகிறது. இதற்காக 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில், 90 சதவீத நிலம், விளை நிலங்கள் ஆகும்.     இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதில் இருந்தே விவசாயிகள், பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, விவசாயிகள் தானாகவே முன்வ...
“எங்களோட உசுர வேணும்னாலும் விட்டுடுவோம்… நிலத்தை விட்டுத்தர மாட்டோம்!”; விசாரணை அதிகாரிகள் முன்பு விவசாயிகள் போர்க்கொடி!

“எங்களோட உசுர வேணும்னாலும் விட்டுடுவோம்… நிலத்தை விட்டுத்தர மாட்டோம்!”; விசாரணை அதிகாரிகள் முன்பு விவசாயிகள் போர்க்கொடி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''எங்களோட உசுரகூட விட்டுடுவோமே ஒழிய, எட்டு வழிச்சாலைக்காக விளை நிலத்தை விட்டுத்தர மாட்டோம்,'' என்று விவசாயிகள் இன்று மீண்டும் போர்க்கொடி உயர்த்தியதால், சட்டப்பூர்வ விசாரணை அரங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   சென்னை - சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு வழிச்சாலைத் திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்தில் மட்டும் 18 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து 248 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஆரம்பத்தில் இருந்தே எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக கால் அங்குலம் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சேலம் மாவட்ட வருவாய்த்துறையோ, நிலம் கையகப்படுத்த வேண்டிய பகுதிகளின் சர்வே எண்களை பத்திரிகைகள் மூலம் அறிவிக்கை வெளியிட்டு, சேட்டிலைட் தொழில்நுட்பத்துடன் நேரடியாக விளை ந...
சேலம்: 414 ரூபாய்தான் கூலி; அதுவும் 14 மாசமா கொடுக்கல! தற்கொலைக்கு தள்ளும் மாவட்ட நிர்வாகம்

சேலம்: 414 ரூபாய்தான் கூலி; அதுவும் 14 மாசமா கொடுக்கல! தற்கொலைக்கு தள்ளும் மாவட்ட நிர்வாகம்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
சேலத்தில், உழைக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சொற்ப கூலியைக்கூட 14 மாதமாக வழங்காமல் போக்குக் காட்டிவரும் மாவட்ட நிர்வாகத்தால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.   சமூகநலத்துறையின் கீழ் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகங்கள் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் இயங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்கு எதிரில் அய்யந்திருமாளிகையிலும், பெத்தநாயக்கன்பாளையத்திலும் செயல்பட்டு வருகிறது. பெற்றோரில் யாராவது ஒருவரை இழந்த அல்லது இருவரையும் இழந்த பெண் குழந்தைகள் இந்தக் காப்பகத்தில் தங்க வை க்கப்படுகின்றனர். 5 வயது முதல் 18 வரை இந்தக் காப்பகத்தில் தங்க வைத்துப் பாதுகாப்பதுடன், அரசுப்பள்ளியில் படிக்க வைத்தும் வருகிறது. தாய், தந்தை இருவரையும் இழந்த பெண் குழந்தை எனில், அவர்களுக்கு 21 வய...