Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: world

உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மானுஷி சில்லார்!;  “உலகத்தில் அதியுயர்ந்தது அம்மா ஸ்தானம்தான்”

உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மானுஷி சில்லார்!; “உலகத்தில் அதியுயர்ந்தது அம்மா ஸ்தானம்தான்”

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் மகுடம் சூடினார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு மீண்டும் உலகி அழகி பட்டம் கிடைத்திருக்கிறது. மகுடம் சூடினார்: சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள சான்யா சிட்டியில் உலக அழகி பட்டத்திற்கான இறுதிக்கட்ட தேர்வு இன்று (நவம்பர் 18, 2017) நடந்தது. 188 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இறுதிக்கட்டத்தில் 5 நாடுகளின் அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் போட்டியில் அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை பெற்ற இந்தியாவின் மானுஷி சில்லார், உலக அழகி பட்டத்தை வென்றார். முன்னாள் உலக அழகியான போர்ட்டோ ரிகோ நாட்டைச் சேர்ந்த ஸ்டெஃபானி டெல் வாலி, அவருக்கு உலக அழகிக்கான கிரீடத்தைச் சூட்டினார். வாழ்க்கைக் குறிப்பு: தற்போது 20 வயதான மானுஷி சில்லார், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். தாய், நீலம் சில்லார். மருத்துவர். தனியார் மருத்துவக்கல
ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: உலகை ஆளப்போகும் தமிழ்!

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: உலகை ஆளப்போகும் தமிழ்!

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தமிழ் அறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக டாக்டர் ஜானகிராமன், டாக்டர் சம்பந்தம் ஆகியோர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். தமிழ் இருக்கைக்காக நிதியுதவியும் வழங்கினர். அதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலும் ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக சுமார் ரூ.33 கோடி செலவாகும் என்று தமிழ் அறிஞர்கள் கூறினர். மேலும், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து இதுவரை ரூ.19 கோடி திரட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைவதற்காக தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடி வழங்கப்படுவதாக தமிழக முதல்வ
‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

இந்தியா, சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று (அக். 18, 2017) 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது 'மெர்சல்'. நடிப்பு: விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா, 'யோகி' பாபு. இசை: ஏ.ஆர்.ரஹ்மான்; ஒளிப்பதிவு: விஷ்ணு; தயாரிப்பு; ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ்; இயக்கம்: அட்லீ. படத்தின் துவக்கத்தில் சென்னையில் அடையாறு, திருவல்லிக்கேணி, போட் கிளப் ஆகிய இடங்களில் மருத்துவத்துறை தொடர்பான ஆட்கள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் கடத்திக் கொல்லப்படுகின்றனர். இதற்கிடைய பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் விஜய், அங்கு ஒரு மேஜிக் நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த அரங்கிலும் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதைத் தொடர்ந்து சத்யராஜ், இந்த கொலைகளுக்குக் காரணம் விஜய்தான் என்ற சந்தேகத்தின்பேரில் அவரை கைது செய்கிறார். உண்மையில் இ