Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: volunteers

ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே! செய்வீர்களா?

ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே! செய்வீர்களா?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைப்பு முடிந்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் பேச்சு செயல்வடிவம் பெறுமா? என்பதில் தொண்டர்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். அதன்பிறகு, ஒன்றரை கோடி தொண்டர்கள் பலமிக்க அதிமுகவை கைப்பற்ற 'சசிகலா அன்டு கோ' கடும் முஸ்தீபுகளில் இறங்கியது. ஜெயலலிதா சிறைக்கு சென்றபோதெல்லாம் தற்காலிக முதல்வராக ருசி கண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அந்த அரியணையை நிரந்தரமாக்கிக் கொள்ள உள்ளூர ஆசை இருந்து கொண்டே இருந்தது. இதை மோப்பம் பிடித்துவிட்ட மன்னார்குடி தரப்பு, அவர் வாயாலேயே சசிகலாவை முதல்வர் பதவியேற்க அழைக்கும்படி ஆளுநரிடம் சொல்ல வைத்தது. ஆனால், ஆசை யாரை விட்டு வைத்தது?. சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி கும்பலுடன் மோத முட
ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா?

ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா?

அரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்
அதிமுகவில் ஆதாயம் தரக்கூடிய பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே இப்போதைக்கு இணைந்திருக்கிறார்கள். ஆனால், மாவட்ட அளவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளில் ஏற்பட்ட பிளவு இன்னும் சரிசெய்யப்படாததால், கிளைக்கழக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பதவி, பணம் போன்ற சுகபோகங்களுக்காக அடித்துக் கொள்பவர்கள் தர்ம யுத்தம், தியாக - துரோக யுத்தம் போன்ற நவீன சொல்லாடல்களில் யுத்தங்களை நடத்தி வருவது தமிழகம் அறிந்த செய்திதான். அதிமுக கட்சிக்குள் நிலவிய தர்ம யுத்தம் இப்போதைக்கு சுமூகமாக 'முடித்து வைக்கப்பட்டு' இருக்கிறது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட பின்னர், அவருடன் 10 எம்எல்ஏக்கள் சென்றனர். மற்றவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வராக தொடர பக்கபலமாக இருந்தனர். ஓபிஎஸ் பக்கம் குறைவான எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இருந்தாலும் மாவட்ட அளவிலான கிளைக்கழக நிர்வாகிகள், குறிப்பாக எந்தப்ப