Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: viral

கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?;  சமூகவலைத்தளங்களில் வைரல்

கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?; சமூகவலைத்தளங்களில் வைரல்

அரசியல், இந்தியா, ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெருந்துறையில் உள்ள ஓர் உணவகத்தில், கழிப்பறையை பயன்படுத்திய வாடிக்கையாளரிடம் பத்து ரூபாய் கட்டணமும், அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், பார்சல் கட்டணமும் வசூலித்துள்ள நிகழ்வு, சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்துவதற்காக பெரும்பாலான உணவகங்களில் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு, சில உணவகங்கள் கழிப்பறை பயன்பாட்டுக்கும் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ருக்குமணி அம்மாள் ஹோட்டல் என்ற பெயரில் பிரபலமான ஓர் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம், ஜூனியர் குப்பண்ணா உணவக உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. இந்த உணவகத்திற்கு வந்த ஒரு வாடிக்கையாளர் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தியுள்ளார். அதற்காக அந்த உணவக நிர்வாகம், 10 ரூபாய் கட்டணம் வசூலித்ததோடு, அதற்கு மாநில ஜிஎஸ்டி,
பாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு!

பாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு!

அரசியல், கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை நடத்த திட்டமிட்ட பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், அக்கட்சியின் உறுப்பினர் படிவங்கள் காகித தட்டுகளாக உருமாற்றம் பெற்றுள்ளது, சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் வலுவாக காலூன்றி விடலாம் என்ற எதிர்பார்ப்பில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கைக்கு இலக்கு நிர்ணயித்து, 'மிஸ்டு கால்' திட்டத்தை அறிவித்தது. அதாவது, மிஸ்டு கால் கொடுத்தால் போதும். அவர்கள் பாஜகவின் உறுப்பினராக வீடு தேடி வந்து சேர்த்துக் கொள்ளப்ப டுவர். இதற்காக அச்சிடப்பட்ட புதிய உறுப்பினர் படிவங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கட்சி நிர்வாகிளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திமுகவில் இருந்த நடிகர் நெப்போலியன் கூட, 'மிஸ்டு கால்' கொடுத்த பின்னர்தான்