Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: vigilance police

விடைத்தாள் டெண்டரில் ஊழல்! பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை!!

விடைத்தாள் டெண்டரில் ஊழல்! பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆசிரியர் நியமனத்தில் ஊழல், போலி சான்றிதழ் விவகாரங்களில் சிக்கித் திணறி வரும் பெரியார் பல்கலையில் விடைத்தாள் கொள்முதல் செய்ததிலும் பல லட்ச ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புதிதாக மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது.   சேலம் பெரியார் பல்கலையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளை படித்து வருகின்றனர். தவிர, இப்பல்கலையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் எடப்பாடி, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய நான்கு இடங்களில் உறுப்புக்கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி கலைக்கல்லூரிகள் என 101 கல்லூரிகள் இப்பல்கலையுடன் இணைவு பெற்றுள்ளன. பல்கலை மற்றும் உறுப்புக்கல்லூரிகள், இணைவு கல்லூரிகள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படி
சேலத்தில் கோயிலில் ரகசிய அறை அமைத்து லஞ்சம் வசூல்: இந்துசமய அறநிலைய அதிகாரி சிக்கினார்!

சேலத்தில் கோயிலில் ரகசிய அறை அமைத்து லஞ்சம் வசூல்: இந்துசமய அறநிலைய அதிகாரி சிக்கினார்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோயிலில் ரகசிய அறை அமைத்து ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரை கையும்களவுமாக காவல்துறையினர் பிடித்தனர்.   சேலத்தில் மிகவும் பழமையான சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்குப் பணிக்காக தற்போது மராமத்துப்பணிகள், திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற பணிகளை இந்துசமய அறநிலையத்துறை ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்து வருகிறது.   இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒப்பந்ததாரர்களிடம் இனாம் வழங்குமாறு இந்துசமய அறநிலைய உதவி ஆணையர் தமிழரசு கேட்டுள்ளார். அவ்வாறு இனாம் கொடுத்தால்தான், இனி வரும் காலத்திலும் கோயில் மராமத்துப்பணிகள் ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும் மிரட்டி வந்துள்ளார். லஞ்சப்பணத்தை, சேலம் தேர்வீதியில் உள்ள ராஜகணபதி கோயிலை ஒட்டியுள்ள ரகசிய அறையில் வந்து கொடுக்கும்பட
கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய திட்ட அலுவலர் கைது!

கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய திட்ட அலுவலர் கைது!

கிருஷ்ணகிரி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலராக பணியாற்றி வருபவர் நரசிம்மன் (49). அரூரைச் சேர்ந்தவர். இதே அலுவலகத்தில், பதிவுரு எழுத்தராக சத்தியமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.   ரூ.15 ஆயிரம் லஞ்சம்:   ஊரக வளர்ச்சி முகமைத் திட்டத்தின் கீழ், மாவட்ட நூலகம் அருகில் வணிக கடைகள் கட்டி வா-டகைக்கு விடப்படுகிறது. அதில் ஒரு கடையை தனக்கு ஒதுக்கித் தருமாறு, கிருஷ்ணகிரி டி.பி. சாலையில் வெல்ல மண்டி நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் விண்ணப்பித்து இருந்தார்.   கடை ஒதுக்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சமாக திட்ட அலுவலருக்குக் கொடுக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பதிவுரு எழுத்தர் சத்தியமூர்த்தி கூறியுள்ளார். அப்போது ஜெயக்குமாரும் பணம் கொடுக்க ஒப்புக்கொண்டாலும், லஞ்சம் கொடுத்து கடையை வாடகைக்கு எடுக்க அவர் விரும்பவில்ல
சேலம்: லஞ்சம் வசூலித்த வீட்டுவசதி வாரிய எழுத்தர் கைது

சேலம்: லஞ்சம் வசூலித்த வீட்டுவசதி வாரிய எழுத்தர் கைது

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அய்யந்திருமாளிகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சேலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரான துரைசாமி, கடந்த 1995ம் ஆண்டு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கியிருந்தார்.   இதற்கான தவணைத்தொகை முழுவதையும் செலுத்திவிட்ட துரைசாமி வீட்டுப் பத்திரம் வழங்குமாறு விண்ணப்பித்து இருந்தார். அவருடைய மனுவை பரிசீலித்த வீட்டுவசதி வாரிய அலுவலக எழுத்தர் தனசேகரன், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக பத்திரம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனக்கூறினார். தவணை எல்லாம் முறையாக செலுத்திய பின்னரும் பத்திரத்தை வழங்க லஞ்சம் கேட்டதால் மனம் உடைந்த துரைசாமி இதுகுறித்து சேலம் மண்டல லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த அலோசனையின்பேரில் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளுடன் இன்று பகல் 12 மணியளவில் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தி
சேலம்: லஞ்ச வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்!

சேலம்: லஞ்ச வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, லஞ்ச வழக்கில் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், ஏட்டு இளங்கோ ஆகிய இருவரும் இன்று (ஆகஸ்ட் 11, 2018) பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.   சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள சின்னதண்டா கிராமத்தில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கடந்த 3ம் தேதி சிலர் சேவல்கட்டு பந்தயம் நடத்தினர். இதற்கு காவல்துறையில் அனுமதி பெறவில்லை எனத் தெரிகிறது. இதனை அப்பகுதி மக்கள் பலர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொளத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வருவதை அறிந்ததும் அங்கிருந்த பலரும் தெறித்து ஓடினர். அப்போது பலர் தங்களது மோட்டார் சைக்கிள்களையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அந்த வாகனங்களை எல்லாம் போலீசார் கொளத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.   இந
முன்னாள் பதிவாளர் தற்கொலை வழக்கிற்கு மூடுவிழா?  முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க சதித்திட்டம்

முன்னாள் பதிவாளர் தற்கொலை வழக்கிற்கு மூடுவிழா? முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க சதித்திட்டம்

அரசியல், ஈரோடு, கிருஷ்ணகிரி, குற்றம், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில், பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் புகாரில் முக்கிய புள்ளியாகச் சொல்லப்படும் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனை தப்ப வைக்கும் நோக்கில், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை வழக்கை இழுத்து மூடும் வேலையில் காவல்துறையினர் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் கிளம்பியுள்ளன. பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-2015 காலக்கட்டத்தில் பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து. அதற்கு முன் இதே பல்கலையில் அவர் உடற்கல்வி இயக்குநராகவும் இருந்தார். அப்போது துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன், உதவி பேராசிரியர்களை நியமிக்க 25 லட்சம் ரூபாயிலிருந்து 45 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.     குறிப்பாக, சுவாமிநாதன் பணியில் இருந்த 2014-2017 காலக்கட்டத்தில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 136 பணியிடங்கள் நிரப்பப்