Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: UPA government

2ஜி வழக்கு: ஆ.ராஜா, கனிமொழி விடுதலை; சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

2ஜி வழக்கு: ஆ.ராஜா, கனிமொழி விடுதலை; சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2 ஜி அலைக்கற்றை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் கனிமொழி எம்பி, முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 21, 2017) தீர்ப்பு அளித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது திமுகவைச் சேர்ந்த ஆ.ராஜா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தின் மூலமாக, ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை ஆணையர் வினோத் ராய் (சிஏஜி) அறிக்கை சமர்ப்பித்தார். இதுபோன்ற இமாலய ஊழல் குற்றச்சாட்டு சுதந்திர இந்தியா அதற்கு முன் கேள்விப்பட்டதில்லை எனும் அளவுக்கு, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற புதிய கொள்கையின்படி ஆ.ராஜா, அவருக்கு வேண்டிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி
போர் விமானம் கொள்முதலில்  35 ஆயிரம் கோடி ஊழல்?;  மோடி மீது அடுத்த அட்டாக்!

போர் விமானம் கொள்முதலில் 35 ஆயிரம் கோடி ஊழல்?; மோடி மீது அடுத்த அட்டாக்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்திய ராணுவத்திற்கு ரஃபேல் ரக போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மூலம் ரூ.35 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புதிய குற்றச்சாட்டை காங்கிரஸ் கிளப்பி இருக்கிறது. இந்த புகாருக்காவது பிரதமர் மோடி பதில் அளிப்பாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. ஊழலை ஒழிப்பேன் என்ற முழக்கத்துடன் பிரதமர் அரியணையேறிய பாஜகவின் நரேந்திர மோடி, வல்லரசு கனவை நனவாக்குவதுதான் முதல் லட்சியம் என்றார். அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணமும், இந்தியாவுக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது என்றே அந்தப் பயணங்கள் குறித்த மதிப்பீட்டை மக்களிடம் பதிய வைத்து வருகிறது பாஜக. காவி கரங்களில் ஊழல் கறை படிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் பாஜக, அறிவியல்பூர்வமான கொள்ளைகளில் ஈடுபட திட்டமிட்டு, அதற்கேற்ப சட்டத்தையும் இயற்றி வருவது கண்கூடு. உதாரணத்திற்கு, அரசியல் கட்சிகளுக்கு ரூ.20