உதயநிதி பட ஷூட்டிங்கால் முடங்கிய சேலம் குகை; 108 ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் செல்வதில் சிக்கல்!
உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் மாமன்னன் பட ஷூட்டிங்கால் சேலம் திருச்சி மெயின ரோட்டில் போக்குவரத்து அடியோடு முடங்கியது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல முடியாமல் கடும் நெரிசல் ஏற்பட்டது.
நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின்
தற்போது "மாமன்னன்" என்ற
புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ்
நாயகியாக நடிக்கிறார்.
வடிவேலு, பகத் பாசில்
ஆகியோரும் நடிக்கின்றனர்.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய
படங்களின் இயக்குநர் மாரி செல்வராஜ்,
இந்தப் படத்தை இயக்குகிறார்.
ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம்
படத்தை தயாரிக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கிறார்.
''மாமன்னன்'' படத்துக்காக
கடந்த இரு மாதத்திற்கும் மேலாக
சேலம் மற்றும் சுற்றுவட்டாரங்களில்
பல இடங்களில் செட் அமைத்து
முக்கிய காட்சிகளை படம் பிடித்து வருகின்றனர்.
கடந்த ம...