Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Twitter page

சாரணர் தேர்தல்: ஹெச்.ராஜாவை வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்!

சாரணர் தேர்தல்: ஹெச்.ராஜாவை வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்!

அரசியல், கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சாரணர் இயக்கத் தலைவர் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை, நெட்டிஸன்கள் டுவிட்டர் பக்கத்தில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். தமிழக சாரண, சாரணியர் இயக்கத்திற்கு கடந்த 12 ஆண்டுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், சாரணர் அமைப்பை முழு வீச்சில் கட்டமைக்கும் நோக்குடன், இந்தாண்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தேசிய தலைமையகம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, தேர்தல் நடத்துவதற்கான பணிகள் சமீப காலமாக நடந்து வந்தது. வழக்கமாக சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்தவர்களே போட்டியிடுவர். இந்தமுறை பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, அப்பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் இயக்குநர் மணி, போட்டியிட்டார். ஹெச்.ராஜா, போட்டியிடுகிறார் என்றதுமே, இந்த தேர்தல் மிகுந்த பரபரப்புக்கு உ
காஞ்சி பட்டுச்சேலையிடம் மனதை தொலைத்த அமெரிக்க பெண் தூதர்

காஞ்சி பட்டுச்சேலையிடம் மனதை தொலைத்த அமெரிக்க பெண் தூதர்

இந்தியா, முக்கிய செய்திகள்
புதுடில்லி : மேற்கத்திய கலாச்சார மோகம் கொண்டு அலையும் இந்தியர்கள் மத்தியில், இந்தியாவுக்கான, அமெரிக்க பெண் தூதர், மேரிகே கார்ல்ஸன், காஞ்சிபுரம் பட்டுச்சேலை அணிந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சுதந்திர தினமான நேற்று, இந்தியாவுக்கான, அமெரிக்க துாதர், மேரிகே கார்ல்ஸன், காஞ்சிபுரம் பட்டு உடுத்தி எடுத்த புகைப்படத்தை, 'டுவிட்டர்' சமூகவலைதளத்தில் வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்கா பெண் தூதர் மேரிகே கார்ல்ஸன். இவர், இந்திய கலாசாரத்தில் மிகுந்த பற்று கொண்டவர். இந்திய சுதந்திர தினத்தில், பாரம்பரிய புடவை உடுத்த விரும்பிய அவர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், அது தொடர்பான பதிவை, ஒரு மாதத்துக்கு முன் வெளியிட்டார். அதில், தனக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து சொல்லும்படி, இணையவாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 'நெட்டிசன்'களின் ஆலோசனைப்படி, காஞ்சிபுரம் பட்டு புட