Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: tamil

உலகை ஈர்த்த தமிழருக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

உலகை ஈர்த்த தமிழருக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வானியல் இயற்பியலில் முதன்முதலாக நோபல் பரிசு பெற்ற தமிழரான சுப்ரமணியன் சந்திரசேகரின் 107வது பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக, கூகுள் நிறுவனம் இன்று (அக். 19, 2017) 'டூடுல்' (Doodle) வெளியிட்டு அசத்தியுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவுடன் இணைந்திருந்த காலக்கட்டத்தில் (பிரிட்டன் இந்தியா) லாகூரில் 19.10.1910ம் தேதி பிறந்தவர் சுப்ரமணியன் சந்திரசேகர். லாகூரில் ஐந்து ஆண்டுகள், பின்னர் லக்னோ நகரில் 2 ஆண்டுகள் வசித்த அவருடைய பெற்றோர், சென்னைக்கு புலம்பெயர்ந்தனர். சந்திரசேகரின் பெற்றோர், சுப்ரமணியன் அய்யர் - சீதாலட்சுமி. 6 சகோதரிகள், 3 சகோதரர்களுடன் பிறந்தவர்தான் சந்திரசேகர். இப்போது இரண்டு வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். அப்போது ஓரளவு வசதி படைத்தவர்களுக்கு ஆரம்பக்கல்வி, அவர்களின் வீட்டிலேயே கற்றுக்கொடுக்கப்படும். அப்படித்தான் சந்திரசேகருக்கும். ஆரம்பக்கல்வி வீட்டிலேயே பயிற்று...
கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்!-EXCLUSIVE

கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்!-EXCLUSIVE

இந்தியா, உலகம், கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
E-X-C-L-U-S-I-V-E சேலம் சித்தனூரை சேர்ந்தவர் சதீஸ்குமார் சரவணன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் இன்றைக்கு உலக அளவில் இந்தியாவின் நம்பிக்கைக்கு உகந்த முகமாக திகழ்கிறார் என்றால் மிகை ஆகாது. ஜெர்மன் நாட்டில் இளநிலை விஞ்ஞானியாக (Junior Scientist) இருக்கிறார். இயற்பியலாளர். சதீஸ்குமார் உள்பட நான்கு பேர் கொண்ட குழுவினர், ஐன்ஸ்டீன் சொல்லிச்சென்ற முக்கியமான ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, கருந்துளைகள் (Black Holes) பற்றிய புதியதொரு கருத்தியல் கொள்கையை உருவாக்கி, விஞ்ஞான உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அதில், சதீஸ்குமாரின் பங்களிப்பு முக்கியமானது. ''எங்களது ஆராய்ச்சிக்கு ஐன்ஸ்டீன் கருத்தியல்தான் அடிப்படை. அதை மையமாக வைத்துக்கொண்டு, விண்வெளியில் (SPACE) உள்ள கருந்துளைகளைப் பற்றி சில புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்திருக்கிறோம்,'' என சதீஸ்குமார் அடக்கத்துடன் சொல்கிறார். கருந...
வதந்தி பரப்பும் ஊடகங்கள்; நெட்டிஸன்கள் பொளேர்!

வதந்தி பரப்பும் ஊடகங்கள்; நெட்டிஸன்கள் பொளேர்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வெறுமனே பரபரப்புக்காக செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் பின்னணியில் அபரிமிதமான லாப வேட்கையும், மனித உணர்வுகளை அலட்சியப்படுத்துவதில் அசட்டுத்தனமான துணிச்சலுமே மலிந்திருக்கிறது என்பதைத்தான் ஊடகங்களின் அண்மைக்கால போக்குகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஊடகம் (மீடியா) என்ற சொல்லே பொதுப்பெயர்தான். இதனுள் அச்சு, காட்சி ஊடகங்கள்¢ இரண்டும் அடங்கும். பொதுவெளியை விடுவோம்; ஊடகத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னும் 'மீடியா' என்றால் காட்சி ஊடகம் என்றே புரிந்து வைத்திருக்கிறார்கள். கோச்சிங் அளிப்பவரை 'கோச்சர்' என்பதுபோல. இப்படிச் சொன்ன பிறகு, இந்தக் கட்டுரை எழுதியதற்காக என் சமகால நண்பர்கள் என்னையும் பகடி செய்யக்கூடும். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்ற புரிதலோடுதான் எழுதுகிறேன். அச்சு ஊடகங்கள் மட்டுமே கோலோச்சிய காலங்களில் அவற்றினூடாக வதந்திகள் பரவியதில்லையா எனக் கேட்கலாம். ...
நிர்மலா சீதாராமன்: பாதுகாப்புத்துறை அமைச்சரான முதல் தமிழச்சி!

நிர்மலா சீதாராமன்: பாதுகாப்புத்துறை அமைச்சரான முதல் தமிழச்சி!

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடுவண் பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று பதவியேற்றுக் கொண்டார். சுதந்திர இந்தியாவில் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முதல் தமிழர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றி அமைக்கப்பட்டது. 9 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர். மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. அனைவருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் இரண்டு மாற்றங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதுவரை தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக தனி அதிகாரத்துடன் இருந்து வந்த நிர்மலா சீதாராமனுக்கு, நாட்டின் மிக இலாகாக்களில் ஒன்றான பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டு உள்ளது. சுதந்திர இந்தியாவில் இத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் தமி...
திரை இசையில் வள்ளுவம்: படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா…! #தொடர்

திரை இசையில் வள்ளுவம்: படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா…! #தொடர்

இலக்கியம், சினிமா, முக்கிய செய்திகள்
பொய்யாமொழிப் புலவன் வள்ளுவன் அறம், பொருளைவிட காமத்துப்பாலில்தான் அதீத கற்பனை ஊற்றெடுக்க பாடல்களை புனைந்துள்ளான். இதை நாம் கடந்த தொடரிலேயே சொல்லி இருக்கிறோம். சினிமாக்காரர்கள் மொழியில் சொல்வதென்றால் வள்ளுவர், 'கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காமத்துப்பாலில்தான் இறக்கி வெச்சிருக்காரு,' போலருக்கு. காதலை நோய் என்ற வள்ளுவன்தான், பெண்ணை மான் என்றான்; மயில் என்றான்; தெய்வம் என்றான்; எமன் என்றும் சொன்னான். ஓரிடத்தில் அவன், 'பெண்களை புரிந்து கொள்ள முடியாத தீ' என்றும் கூறுகிறான். உங்களிடம் ஒரு கேள்வி. நெருப்பின் அருகில் சென்றால் என்ன நடக்கும்?. உடல் சூடாகும் அல்லவா!. அதேநேரம் நெருப்பை விட்டு சற்று தொலைவு விலகிச் சென்றால் உடல் குளிரும் அல்லவா? இதுதான் இயல்பு. ஆனால், இயற்கைக்கு முரணான இயல்புடன் கூடியவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என வள்ளுவன் ஆச்சர்யம் மேலிட சொல்கிறான். உலகளந்த வள்ளுவனுக்கு, ...
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே – திரை இசையில் வள்ளுவம் #தொடர்

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே – திரை இசையில் வள்ளுவம் #தொடர்

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
திரை இசைப்பாடல்களில் பொதிந்திருக்கும் குறள் இன்பத்தை வெளிக்கொணர்வதே இத்தொடரின் நோக்கம். இந்த பகுதியில் பெரும்பாலும் காதல் பாடல்களே இடம் பெற்று வந்தன. இந்த முறை அதில் சிறு மாற்றம். இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நேரம் இது. மாணவர்களுக்கு இந்தத் தொடரின் மூலம் சில செய்திகளைச் சொல்லலாம். இரண்டாவது காரணம், ஜூன் 24ம் தேதி இளங்கம்பன் கண்ணதாசன் பிறந்த தினம். நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். ''பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை'' என்ற பொய்யாமொழியன், செல்வத்தை ஒருபோதும் உடைமையாகச் சொன்னதில்லை. அது வரும்; போகும். நிலையற்றது. அவன், ஊக்கம் உடைமையைத்தான் உண்மையான உடைமை என்கிறான். அதனால்தானோ என்னவோ அய்யன் வள்ளுவன், ஊக்கமுடைமையை பொருட்பாலில் வைத்துப் பாடியிருக்கிறான். ஒருவனுடைய ஊக்கம் எப்படி இருக...
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே… : திரை இசையில் வள்ளுவம்!

உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே… : திரை இசையில் வள்ளுவம்!

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
சங்க இலக்கியங்களில் திருக்குறளில் சொல்லப்பட்ட பல பாடல்களை அடியொற்றி, அவ்வையாரும் பாடியிருக்கிறார். இதை 'கட் - காப்பி - பேஸ்ட்' என்பதா? அல்லது உயர்ந்தவர்களின் சிந்தனைகள் ஒரே மாதிரிதான் இருக்கும் என்று புரிந்து கொள்வதா?. சங்க காலத்தில் நடந்ததை இப்போது எதற்கு சர்ச்சையாக்குவானேன். என் பாட்டுக்கு ஏதோ ஒன்று சொல்வதைவிட, திரைப்பாட்டுக்கும் வள்ளுவத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பேசி விடுவதே நல்லதென படுகிறது. சங்ககாலக் கவிஞர்களின் படைப்புகளுக்குள் இருக்கும் ஒப்புமையைப் போல, திரைப்படப் பாடல் ஆசிரியர்களின் படைப்புகளுக்குள்ளும் எக்கச்சக்க ஒற்றுமைகள் உண்டு. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே 'நினைத்ததை முடிப்பவன்' (1975) படத்தில் கவிஞர் மருதகாசி எழுதிய, 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...' என்ற பாடலுக்கும், வள்ளுவத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விரிவாகவே பார்த்திருக்கிறோம். கவிஞர் மருதகாசிக்கு முன்ப...