Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Tamil Nadu Water Resources Board

காவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி!

காவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 16ம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இது தொடர்பாக யாரும் மேல்முறையீடு செய்ய இயலாது என்பதால், இப்போதைக்கு கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் பெரிய அளவில் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை. அதற்காக உச்ச நீதிமன்றம் நடுநிலையான தீர்ப்பை வழங்கி விட்டதாக நாம் கருதிவிட முடியாது. காவிரி நீர் பங்கீட்டில் பெரிய அளவில் ஆதாயம் அடைவது கர்நாடகமும், தமிழகமும்தான். கேரளாவும், புதுச்சேரியும் சொற்ப அளவில் ஆதாயம் பெறக்கூடிய இதர மாநிலங்கள். காவிரி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 1991ம் ஆண்டு அளித்த இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீர் வழங்க வேண்டும் என்று சொல்லி இருந்தது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப