Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: surrender

வீரப்பன் வேட்டை பற்றி ஜெயலலிதா சொன்னது என்ன?; மனம் திறக்கும் கே.விஜய்குமார்

வீரப்பன் வேட்டை பற்றி ஜெயலலிதா சொன்னது என்ன?; மனம் திறக்கும் கே.விஜய்குமார்

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநில அரசுகளுக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிம்ம சொப்பனமாக இருந்து வந்த சந்தன கடத்தல் வீரப்பன், கடந்த 2004ம் ஆண்டு அக்.18ம் தேதி காவல்துறை அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் வேட்டை முடிந்து கடந்த 2017, 18ம் தேதியுடன் 13 ஆண்டுகள் கடந்து விட்டது. அவரை, 'பட்டுக்கூடு ஆபரேஷன்' (Operation Cocoon) மூலம் வேட்டையாடிய அதிரடிப்படைத் தலைவர் கே.விஜயகுமார், 'வீரப்பன் - சேசிங் தி ப்ரிகாண்ட்' (Veerappan - Chasing the Brigand) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் வீரப்பன் ஏன் வேட்டையாடப்பட்டார், கர்நாடகா சூப்பர் ஸ்டார் ராஜ் குமார், அமைச்சர் நாகப்பா ஆகியோரை வீரப்பன் கடத்தியது ஏன் என்பது குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார்.   காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட கே.விஜயகுமார், நடுவண் பாதுகா
‘போதை’ நடிகருக்கு ஏற்பட்ட கதி!

‘போதை’ நடிகருக்கு ஏற்பட்ட கதி!

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'சுப்ரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெய். சென்னையில் வசிக்கிறார். கடந்த செப். 21ம் தேதி, அடையாறு பாலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச்சென்றார். திடீரென்று கார், பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காவல்துறை விசாரணையில் நடிகர் ஜெய், குடிபோதையில் காரை ஓட்டிச்சென்றது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஜெய் போக்குக் காட்டி வந்தார். அதனால் அவருக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரே இன்று (அக். 7) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட், திரைப்படத்தில் கார் ஓட்டுவதுபோல் நிஜத்திலும் ஓட்டினீர்களா? என்று எச்சரித்தார். அப்போது நடிகர் ஜெய் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடு