Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: sued

பேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

பேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  ஊழல் புகார்களைத் தொடர்ந்து தற்போது உதவி பேராசிரியரை தாக்கியதாக மற்றொரு சர்ச்சையிலும் பெரியார் பல்கலை முன்னாள் துணை வேந்தர், பதிவாளர், டீன் ஆகியோர் சிக்கியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலத்தை அடுத்த சித்தனூர் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (52). இவர் பெரியார் பல்கலையில் பொருளாதார துறையில் உதவி பேராசிரியராக கடந்த 2005ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதன் சாராம்சம்: கடந்த 29.3.2017ல் திருச்சியில் இருந்து வெளியான தினமலர் நாளிதழில் பெரியார் பல்கலையில் நடந்து வரும் ஊழல் தொடர்பாக ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியில், அப்போது துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன், லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாகவும், பதவி
ரஜினிக்கு சொந்த வீட்டிலேயே கடும் எதிர்ப்பு;  லதா ரஜினிகாந்த் வழக்கு!

ரஜினிக்கு சொந்த வீட்டிலேயே கடும் எதிர்ப்பு; லதா ரஜினிகாந்த் வழக்கு!

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்புத் திட்டத்தை நரேந்திர மோடி அறிவித்தபோது, அதை வரவேற்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், அந்த திட்டத்தால்தான் வருமானம் பாதிக்கப்பட்டதாக அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், இந்த வளாகத்தில் உள்ள ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, அதில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இதற்காக அந்தக் கடைக்கு அவர் மாதம் 3,702 ரூபாய் வாடகை செலுத்தி வந்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி கடந்த ஜூன் மாதம் கடையின் வாடகையை உயர்த்தியது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் லதா ரஜினிகாந்திற்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில், மார்ச் மாதம் முதல் 21,160 ரூபாய் வாடகை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை