Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: social networks

ஓ.பன்னீர்செல்வத்தை  கதற விடும்  மீம் கிரியேட்டர்கள்!

ஓ.பன்னீர்செல்வத்தை கதற விடும் மீம் கிரியேட்டர்கள்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பக்கத்தில் 'அம்மா ஆட்சி' என்று ஒரு பதிவுதான் பதிவிட்டார். மீம் கிரியேட்டர்கள் அவரை நொந்து நூடுல்ஸ் ஆக்கி, அழ வைக்கும் அளவுக்கு கேலி, கிண்டல் என கருத்துகளை பதிவிட்டுள்ளனர். டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்&ஆப் போன்ற சமூக வலைத்தளங்களே இப்போது சாமானிய மக்களின் நேரடி மேடையாகி விடுகிறது. கையில் ஒரு மொபைல் ஃபோன் இருந்தால்போதும், எதிரில் நிற்பவர் யாரென்றெல்லாம் பார்ப்பதில்லை. உடனுக்குடன் கருத்துகளை வரவேற்றோ, பகடி செய்தோ, அல்லது தர்ம அடியோ கொடுக்கும் விதமாக பதிலடி கொடுத்து விடுகின்றனர். அது அமெரிக்க அதிபர் டிரம்ப்பாக இருந்தாலும் சரி. பிரதமர் மோடியோ அல்லது தமிழக முதல்வரோ யாராக இருந்தாலும் இணையவாசிகளுக்கு ஒரே அளவுகோல்தான். அதேநேரம் நல்லதை வரவேற்கவும் தயங்குவதில்லை. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (அக். 14, 2017), '...
பாஜகவுக்கு ரஜினி சொம்பு தூக்கினாரா?:  கமல் ரசிகர்கள் கிண்டல்

பாஜகவுக்கு ரஜினி சொம்பு தூக்கினாரா?: கமல் ரசிகர்கள் கிண்டல்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மையே சேவை' திட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றுள்ள நிலையில், கமல்ஹாசன் ரசிகர்கள் டுவிட்டரில் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ரஜினி - கமல் ரசிகர்களிடையே சமூகவலைத்தளங்களில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவு, திமுக தலைவர் கருணாநிதியின் முதுமை காரணமாக தமிழக அரசியலில் இயல்பாகவே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. நல்லகண்ணு, மு.க.ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் போன்ற மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள் இருந்தாலும், அவர்கள் அனைத்து தரப்பு மக்களாலும் ஈர்க்கப்படவில்லை. சீமான், திருமாவளவன், அன்புமணி போன்றவர்கள் மாற்று அரசியலை முன்னெடுக்கின்றனர். ஆனாலும், அவர்களை முதல்வர் நாற்காலிக்கான அந்தஸ்தில் வைத்துப் பார்க்க மக்கள் ஏனோ தயங்குகின்றனர். இத்தகைய இடைவெளியில்தான் ரஜினி, கமல்ஹாசன் ஆகிய இரு முன்னணி நடிகர்களுக்கும் அரசியல் களம் காணும் ஆசை உச்சம் தொட்டு...
‘பானி பூரி’ கருத்து: மூக்குடைபட்ட ஹெச்.ராஜா!

‘பானி பூரி’ கருத்து: மூக்குடைபட்ட ஹெச்.ராஜா!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கில் வாதாட, வட இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வந்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்ததற்கு, அவரை இணையவாசிகள் சமூகவலைத்தளங்களில் சரமாரியாக மூக்குடைத்திருக்கிறார்கள். கடந்த சில நாள்களாகவே குண்டர் சட்டம், திருமுருகன் காந்தி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் என்று கொஞ்சம் சீரியஸான கட்டுரைகளையே எழுதி வந்தோம். சரி...நம்மையும், மற்றவர்களையும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்கலாமே என்று தோன்றியது. அப்படியே டுவிட்டர் பக்கத்தில் மேய்ந்தபோது, ஓர் அரசியல் பிரபலத்தை நெட்டிஸன்கள் சகட்டுமேனிக்கு 'வெச்சி' செய்திருப்பது தெரியவந்தது. வடிவேல் பாணியில் சொல்லணும்னா, ''எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான். இவன் ரொம்ப நல்லவன்னு'' சொல்லும் அளவுக்கு போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லோரும் ஃபோன் போட்டு அடிச்சி துவைத்திருக்கிறார்கள். வெயிட் வ...
கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்!

கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திராவிட சிந்தனையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முகமாகவே கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகள் அமையும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் பலமாக உருவாகி உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் வலுப்பெற்ற நேரத்தில் இருந்தே கமலின் அரசியல் விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் ரொம்பவே 'வைரல்' ஆகி வருகின்றன. பல படங்களில், கமல் பேசிய முற்போக்கு வசனக் காட்சிகளை அவருடைய ரசிகர்கள் தேடிப்பிடித்து 'வைரல்' ஆக்கி வருகின்றனர். தமிழ் சினிமாக்களில் அவர் எந்தளவுக்கு திராவிடம் பேசினாரோ, அதற்கு நிகராக வைணவக் கருத்துகளையும், கடவுள் மீதான நம்பிக்கைகளையும் எதிர் பாத்திரங்கள் மூலம் வார்த்தெடுத்திருக்கிறார். ஒருவேளை, தன் கருத்துகளை ஆழமாகச் சொல்வதற்காக அத்தகைய பாத்திரங்களை சித்தரித்திருக்கலாம். அல்லது, வணிக நோக்கமாக இருக்கலாம். எனினும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கமல்ஹாசன், பெரியாரிஸத்தையோ, பொதுவ...