Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Sivakumar

சர்வோதய சங்க ஊழல் விவகாரம்: அதிகாரிகளுக்கு ‘கில்மா’ மேட்டர்களை சப்ளை செய்தது அம்பலம்!

சர்வோதய சங்க ஊழல் விவகாரம்: அதிகாரிகளுக்கு ‘கில்மா’ மேட்டர்களை சப்ளை செய்தது அம்பலம்!

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சர்வோதய சங்கத்தில் நடந்த ஊழல் முறைகேடுகளைக் கண்டுகொள்ளாமல் இருக்க, கேவிஐசி துறை அதிகாரிகளுக்கு மது, மாது இத்யாதிகளை சப்ளை செய்து கவிழ்த்த விவகாரம் சிபிஐ விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கோவை மாவட்டம் ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில், குப்புசாமி லேஅவுட்டில், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் 28 கிளைகள் உள்ளன. காந்தியக் கொள்கையான கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான் சர்வோதய சங்கங்களின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, கிராமப்புற கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், அவர்களுக்கு பட்டு பாவு, ஊடு நூல் கொடுத்து, அதன்மூலம் பட்டுச்சேலைகள் நெய்து, விற்பனை செய்வதுதான் சர்வோதய சங்கங்களின் முதன்மைப் பணி ஆகும். மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் எனப்படும் கேவிஐசி துறையின் கண்காணிப்பின் கீழ் இந்த சங்கங்கள் செயல்படுகின்றன. மைய அரசின் எம்எ
குண்டர் சட்டம்: ஜனநாயக குரல்வளையை நசுக்கும் ஆயுதம்!

குண்டர் சட்டம்: ஜனநாயக குரல்வளையை நசுக்கும் ஆயுதம்!

இந்தியா, குற்றம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சமூக விரோதிகள், ரவுடிகளை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட குண்டர் தடுப்புக்காவல் சட்டம் (GOONDAS ACT), அரசுக்கு எதிராக போராடுவோர் மீது பாயும் போக்கு அதிகரித்துள்ளதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.   இந்தியா, ஆங்கிலேயர்களின் காலனிய ஆதிக்கத்தில் இருந்தபோது, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் இந்தியர்களை ஒடுக்குவதற்காக தடுப்புக் காவல் சட்டத்தைப் பயன்படுத்தினர். நாடு விடுதலை அடைந்த பிறகும், பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு சீர்குலைவை கட்டுக்குள் கொண்டுவர, ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த தடுப்புக் காவல் சட்டத்தை இந்திய அரசும் அப்படியே பின்பற்றி வந்தது.     இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டு வந்த 'மிசா' (MISA) சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 110806 பேர் எந்தவித காரணமுமின்றி கைது