Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Shekhar Reddy

“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி!

“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி!

அரசியல், இந்தியா, கோயம்பத்தூர், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய வருமானவரி சோதனையை இன்றைய (நவம்பர் 9, 2017) தினம் சந்தித்திருக்கிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டிடிவி தினகரன் உறவுகளை குறி வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த சோதனைதான் அனைத்து ஊடகங்களிலும் 'பிக் பிரேக்கிங்' சேதி. சசிகலாவின் நேரடி உறவுகளான நடராஜன், திவாகரன், மகாதேவன், சுந்தரவதனம், டிடிவி தினகரன், விவேக் ஜெயராமன், ஜெயானந்த், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மருத்துவர் வெங்கடேஷ், மருத்துவர் சிவக்குமார் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் பிரதான சோதனைக் களங்களாகின. இவற்றுடன் ஜெயா டிவி, டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை, கிருஷ்ணபிரியாவின் என்ஜிஓ அலுவலகங்களும் தப்பவில்லை. மன்னார்குடி கும்பலின் ஆதரவாளர்களான பெங்களூர் புகழேந்தி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினரும் வழக்கறிருமான நாமக்கல் செந்தில், கோவை மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் உதவி
”நம்புங்கள் பிரதமரே!  முயலுக்கு நான்கு கால்கள்தான்!!”

”நம்புங்கள் பிரதமரே! முயலுக்கு நான்கு கால்கள்தான்!!”

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு  (Demonetisation) நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், சமூகவலைத்தளங்களில் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பலர் கேலி, கிண்டலாக மீம்ஸ்கள் மூலம் கருத்துகளை பதிவிட்டு உள்ளனர். இரவு நேரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த வயதிலும் அப்படி என்னதான் பற்றுதலோ தெரியவில்லை. இப்படிச் சொல்வது கொஞ்சம் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஸ்டைல் போலத் தோன்றினாலும் யாரும் அனர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். அவர் நாட்டை உலுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் இரவில்தான் அறிவிக்கிறார். பணமதிப்பிழப்பு முதல் ஜிஎஸ்டி வரை எல்லாமே இரவில்தான் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 1000 ரூபாய், 500 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்படுவது குறித்து எனக்குக்கூட தெரியாது என அப்பாவியாகச் சொன்னார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. ரிசர்வர் வங்கி ஆளுநருக்கே கூட அறிவிப்புக்கு சற்று முன்னர்தான் தெரி