தொழில் தொடங்க 5 கோடி வரை கடனுதவி! இளைஞர்களுக்கு அழைப்பு!!
'நீட்ஸ்' திட்டத்தின் கீழ்,
படித்த வேலைவாய்ப்பற்ற
இளைஞர்கள் புதிதாக தொழில்
துவங்க 10 லட்சம் முதல்
5 கோடி ரூபாய் வரை மாவட்ட
தொழில் மையம் மூலமாக
கடனுதவி வழங்கப்படும்
என அரசு அறிவித்துள்ளது.
புதிய தொழில்முனைவோரை
ஊக்குவிக்கும் வகையில்,
'புதிய தொழில்முனைவோர் மற்றும்
தொழில் நிறுவன மேம்பாட்டு
திட்டம்' (நீட்ஸ்) என்ற திட்டம்,
அந்தந்த மாவட்ட தொழில்
மையம் மூலமாக
செயல்படுத்தப்பட்டு
வருகிறது. இத்திட்டத்தின் கீழ்
உற்பத்தி, சேவை தொழில்களுக்கு
10 லட்சம் ரூபாய் முதல்
அதிகபட்சமாக 5 கோடி ரூபாய்
வரை திட்ட மதிப்பீடு
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தில் கடனுதவி பெற,
குடும்ப ஆண்டு வருமான
உச்சவரம்பு ஏதுமில்லை.
பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு /
தொழில் பயிற்சி தேர்ச்சி பெற்ற
21 வயது முதல் 35 வரை உள்ள
ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு பிரிவினருக்கு மட்டும்
அதி...