ரஜினிகாந்தின் புதிய அரசியல் கட்சி ஜனவரியில் அறிவிப்பு!: சொல்கிறார் சத்யநாராயண ராவ்
நடிகர் ரஜினிகாந்த், தான் தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சியின் பெயரை வரும் ஜனவரி மாதம் அறிவிப்பார் என்று அவருடைய அண்ணன் சத்யநாராயண ராவ் இன்று (நவம்பர் 29, 2017) தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ். அவர் சில தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தர்மபுரி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார்,'' என்றார்.
மேலும், ''ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று அவர் அரசியல் முடிவுகள் குறித்து எதுவும் அறிவிக்கப் போவதில்லை. அவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்,'' என்றும் கூறினார்.
முன்னதாக சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்தின் மனைவி லதா, அரசியல் கட்சி தொடங்குவது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவர் என்ன முடிவு ...