சேலத்தில் வன்னியர்களை ஒடுக்கும் எடப்பாடி!; ‘சர்கார்’ வேட்பாளர் தாக்கு!!
சர்கார் படத்தில் தேனி தொகுதி சுயேட்சை வேட்பாளராக நடித்துள்ள வேங்கை அய்யனார், சேலம் மாவட்டத்தில் வன்னியர்களை ஒடுக்கும் வேலைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
உதவிய வரலட்சுமி:
சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்டு, தொடர்ந்து நான்கு முறை தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளில் வகித்திருப்பவர் வேங்கை அய்யனார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த வேங்காம்பட்டி பூவாயம்மன் கோயில் திருவிழாவிற்கு நடிகை வரலட்சுமி சரத்குமாரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து வந்தார்.
அப்போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் வரலட்சுமியின் பரிந்துரையின்பேரில், அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் நடிக்க இயக்குநர் முருகதாஸிடம் வாய்ப்புப் பெற்றுத்தந்தார். அந்தப்படத்தில், 210 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களை விஜய் களமிறக்கும் காட்சி இடம் பெற்றுள்...