Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Salem Periyar University

பெரியார் பல்கலையில் என்னதான் நடக்கிறது? இன்றாவது மனம் திறப்பாரா பதிவாளர்?

பெரியார் பல்கலையில் என்னதான் நடக்கிறது? இன்றாவது மனம் திறப்பாரா பதிவாளர்?

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே சுற்றிச்சுழன்றடித்து வரும் ஊழல் புகார்கள் குறித்து பணி நிறைவு பெறும் நாளான இன்றாவது (ஆகஸ்ட் 17, 2018) பதிவாளர் மணிவண்ணன் மனம் திறப்பாரா? என்ற எதிர்பார்ப்பு பல்கலை வட்டாரத்தில் ஏகத்துக்கும் பரவிக்கிடக்கிறது. சேலம் பெரியார் பல்கலையில் பதிவாளராக பணியாற்றி வருபவர் பேராசிரியர் மணிவண்ணன். இவருடைய தாய்ப்பல்கலையான தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில் இணை பேராசிரியராகவும், பின்னர் தமிழ்நாடு கல்வியியல் பல்கலையில் தேர்வாணையராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்ற மணிவண்ணன், கடந்த 18.8.2015ம் தேதி பெரியார் பல்கலையில் பதிவாளராக பணியில் சேர்ந்தார்.   மூன்றாண்டு காலம் 'டென்யூர்' முடிந்து இன்றுடன் அவர் பணி நிறைவு பெறுகிறார். பதிவாளர் பதவி என்பது, துணை வேந்தருக்கு அடுத்த நிலையில் நிர்வாக ரீதியில் அதிகாரமிக்கது ஆகும். ஆசிரியர் மற்றும் ஆச...