Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Rohit Sharma

கடைசி டி-20: இந்தியா அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது!

கடைசி டி-20: இந்தியா அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கேப் டவுனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ட்வென்டி-20 போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, 3 போட்டிகள் கொண்ட தொடைரையும் 2-1 கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று ட்வென்டி-20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் இரு அணிகளும் நேற்று (பிப்ரவரி 24, 2018) களமிறங்கின. இந்திய நேரப்படி, இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்கியது. விராட் கோலிக்கு ஓய்வு: கேப்டவுன் நியூலேன்ட் மைதானத்தில் போட்டி நடந்தது. இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கேப்டன் விராட் கோலிக்கு முதுகுப்...
செஞ்சூரியன் டி-20: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி

செஞ்சூரியன் டி-20: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய வீரர்களின் ரன் குவிப்பும், பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டி-20 போட்டி செஞ்சூரியனில் நேற்று (பிப்ரவரி 21, 2018) நடந்தது. 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டுமினி, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். இந்திய அணியில், தசை பிடிப்பால் அவதிப்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரை வீசிய கிறிஸ் மோரீஸ் ...
5வது ஒருநாள் கிரிக்கெட்:  தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை;  மிரட்டும் விராட் கோலி படை

5வது ஒருநாள் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை; மிரட்டும் விராட் கோலி படை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
தென்னாப்பிரிக்கா உடனான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இத்துடன் 6 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், 25 ஆண்டுகால தொடர் தோல்வி என்ற சோகத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற இந்திய அணி, நான்காவது போட்டியில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று (பிப்ரவரி 13, 2018) நடந்தது.   ரோஹித் ஷர்மா சதம்:   டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ராம், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் ஷர்ம...
5வது ஒருநாள்: ரோஹித் ஷர்மா அபார சதம்; இந்தியா 274 ரன்கள் குவிப்பு

5வது ஒருநாள்: ரோஹித் ஷர்மா அபார சதம்; இந்தியா 274 ரன்கள் குவிப்பு

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
போர்ட் எலிசபெத்தில் நடந்து வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக ஆடிய ரோஹித் ஷர்மா 115 ரன்களை குவித்தார். இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, போர்ட் எலிசபெத்தில் இன்று (பிப்ரவரி 13, 2018) நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ராம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா தொடர்ச்சியாக முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வென்றது. தொடரில் இந்தியா 3-1 கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற வரலாறு படைக்க வாய்ப்பு இருக்கிறது. அத...
3வது ஒருநாள்: விராட் கோலி, ஷிகர் தவான் அரை சதம்

3வது ஒருநாள்: விராட் கோலி, ஷிகர் தவான் அரை சதம்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அரை சதம் கடந்தனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று (பிப்ரவரி 7, 2018) தொடங்கியது. இதில் 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆறு போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளதால், இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம், தென்னாப்பிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விக்கெட் கீப்பராக ஹெய்ன்ரிச் கிளாசீன் என்பவரும், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள லுங்கி நிகிடியும் முதல் முறையாக தென்னாப்பிரிக்க ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளனர். இப்போட்டியிலும் ரோ...
கடைசி டி20: இந்தியா போராடி வெற்றி;  இலங்கை ‘வாஷ் அவுட்’

கடைசி டி20: இந்தியா போராடி வெற்றி; இலங்கை ‘வாஷ் அவுட்’

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்திலும் வென்று, இலங்கை அணியை இந்தியா 'வாஷ் அவுட்' செய்தது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (டிசம்பர் 24, 2017) நடந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றிவிட்ட நிலையில் இன்றைய வெற்றி, தோல்வி இந்திய அணியை பாதிக்காது. எனினும், இலங்கை அணியை, 'வாஷ் அவுட்' செய்யும் முனைப்பில் இந்தியா களமிறங்கியது. ஒரு வெற்றியாவது பெற்று விடமாட்டோமா என்ற எதிர்பார்ப்பில் இலங்கை அணியும் களம் கண்டது. இந்திய அணியில் பந்து வீச்சாளர்கள் சாஹல், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளி க்கப்பட்டு, சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். தமிழ...
இந்தூர் டி20: ரோஹித் ஷர்மா அபார சதம்; இலங்கைக்கு தர்ம அடி;  தொடரை வென்றது இந்தியா!

இந்தூர் டி20: ரோஹித் ஷர்மா அபார சதம்; இலங்கைக்கு தர்ம அடி; தொடரை வென்றது இந்தியா!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இந்தூரில் இன்று (டிசம்பர் 22, 2017) நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்திய வீரர்கள் துவம்சம் செய்தனர். அபாரமாக வெளுத்து வாங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா, குறைந்த பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். அத்துடன் இந்திய அணி தொடரையும் வென்றது.  இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையை 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடந்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் விஸ்வ பெர்ணாண்டோ, சனாகா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சதீரா சமரவிக்ரமா, சதுரங்கா டி சில்வா சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு ...
கிரிக்கெட்: இலங்கை உடனான 3வது ஒருநாள் போட்டியையும் இந்தியா வென்றது;  தொடரையும் கைப்பற்றி அசத்தல்

கிரிக்கெட்: இலங்கை உடனான 3வது ஒருநாள் போட்டியையும் இந்தியா வென்றது; தொடரையும் கைப்பற்றி அசத்தல்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் சதம் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்கள் அற்புதமான ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒரு நாள் தொடரையும் 2-1 கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இலங்கைக்கு கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி விசாகபட்டினத்தில் இன்று (டிசம்பர் 17, 2017) நடந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருந்தது. அதனால் இன்றைய போட்டி, இரு அணிகளுக்கும் தொடரை வெல்லப்போவது யார் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பந்து வீச்சை தேர்வு செய்தார். உபுல் தரங்காவின் அதிரடியால் ஒரு கட்டத்தில் இலங்கை அணி 22.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 136 ரன்கள் எடுத்திருந்தது. சீரான ஆட்டத்...
காதல் மனைவிக்கு பறக்கும் முத்தம் பார்சல்…!;  இரட்டை சத நாயகன் ரோஹித் லவ்ஸ்…!!

காதல் மனைவிக்கு பறக்கும் முத்தம் பார்சல்…!; இரட்டை சத நாயகன் ரோஹித் லவ்ஸ்…!!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, மைதானத்தில் இருந்தவாறே கேலரியில் அமர்ந்திருந்த தன் காதல் மனைவிக்கு பறக்கும் முத்தத்தை அனுப்பியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி, மொஹாலியில் இன்று (டிசம்பர் 13, 2017) நடந்தது. முதலில் மட்டையை சுழற்றிய இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி, இலங்கை அணியை தெறிக்கவிட்டனர். இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி, 392 ரன்களை குவித்ததுடன், இலங்கை அணியையும் வீழ்த்தியது. ஒருமுனையில் நங்கூரம் பாய்ச்சி நின்ற தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, அரை சதத்தை சதமாகவும், சதம் எட்டிவிட்டால் அதை இரட்டை சதம் அல்லது பெரிய அளவிலான ரன்களாகவும் மாற...
மொஹாலி கிரிக்கெட்: இலங்கையை நொறுக்கியது இந்தியா!; ரோஹித் இரட்டை சதம்!!

மொஹாலி கிரிக்கெட்: இலங்கையை நொறுக்கியது இந்தியா!; ரோஹித் இரட்டை சதம்!!

தமிழ்நாடு
மொஹாலியில் நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இந்திய வீரர் ரோஹித் ஷர்மா, ஒருநாள் அரங்கில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தரம்சாலாவில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணியை இலங்கை வெறும் 112 ரன்களில் வாரிச்சுருட்டி, அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று (டிசம்பர் 13, 2017) நடந்தது. முதல் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கும், கேப்டனாக தன்னை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியிலும் ரோஹித் ஷர்மா இருந்தார். இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் ச...