நடிகனாக மட்டுமே என் வாழ்க்கை முடிந்து விடக்கூடாது!: மலேசியாவில் ரஜினி பேச்சு
ஆண்டவர் கொடுத்த தொழிலில் நாம் நாணயமாகவும், நேர்மையாகவும் செயல்பட்டால் நமக்கு எல்லாமே கிடைக்கும் என்று மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் சார்பில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நேற்று (ஜனவரி 6, 2017) நட்சத்திரக் கலை விழா நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக நடிகர் விவேக், ரஜினிகாந்திடம் பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
விவேக் கேட்ட கேள்விகளுக்கு ரஜினிகாந்த் மிக இயல்பாகவும், ஜாலியாகவும் பதில் அளித்தார். எனினும், அவர் கேட்கத் தொடங்குவதற்கு முன்பே, ரொம்ப கடினமான கேள்விகளைத் தவிர்க்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார்.
விவேக் கேள்விகளும் ரஜினியின் பதில்களும்....
பைரவி டு இந்திரன், சிவாஜிராவ் டு ரஜினிகாந்த், நடிகர் டு தலைவர் இந்த பயணம் பற்றி?
என் 45 வருட சினிமா பயணத்தில் என்னால் முடிந்த அளவு என் படங்களில் நல்ல க...