Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: rajamma

ஜெ., மனதில் என்ன இருந்தது?: நாகராஜன்

ஜெ., மனதில் என்ன இருந்தது?: நாகராஜன்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிங்கம்போல் வாழ்ந்த ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தக் கூடாது என்பதற்காகவே, அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்த ஒளிப்படங்களை சசிகலா வெளியிட மறுத்துவிட்டார் என்று அதிமுகவின் கோவை எம்பி நாகராஜன் இன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளார். கோவை எம்பியும் வழக்கறிஞருமான நாகராஜன் இன்று (29/8/17) காலை திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தார். அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவு குறித்து அவர் பேசினார். பிரிந்து கிடக்கும் டிடிவி தினகரன் அணியினரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அழைத்துப் பேச வேண்டும் என்றார். அரசியல் என்பதே சூதுதானே. சூதில் வெற்றி பெறுவதுதான் முக்கியம் என்றார். சிலரை ஒதுக்கி வைப்பதும், பின்னர் மீண்டும் சேர்த்துக் கொள்வது எல்லாமே அரசியல் ராஜ தந்திரம். ஓபிஎஸ், இந்த ஆட்சியைப்பற்றி என்னவெல்லாமோ சொன்னார். அவரை இப்போது நாங்கள் துணை முதல்வராக ஏற்கவில்லையா? ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதாவின
திரை இசையில் வள்ளுவம்: படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா…! #தொடர்

திரை இசையில் வள்ளுவம்: படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா…! #தொடர்

இலக்கியம், சினிமா, முக்கிய செய்திகள்
பொய்யாமொழிப் புலவன் வள்ளுவன் அறம், பொருளைவிட காமத்துப்பாலில்தான் அதீத கற்பனை ஊற்றெடுக்க பாடல்களை புனைந்துள்ளான். இதை நாம் கடந்த தொடரிலேயே சொல்லி இருக்கிறோம். சினிமாக்காரர்கள் மொழியில் சொல்வதென்றால் வள்ளுவர், 'கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காமத்துப்பாலில்தான் இறக்கி வெச்சிருக்காரு,' போலருக்கு. காதலை நோய் என்ற வள்ளுவன்தான், பெண்ணை மான் என்றான்; மயில் என்றான்; தெய்வம் என்றான்; எமன் என்றும் சொன்னான். ஓரிடத்தில் அவன், 'பெண்களை புரிந்து கொள்ள முடியாத தீ' என்றும் கூறுகிறான். உங்களிடம் ஒரு கேள்வி. நெருப்பின் அருகில் சென்றால் என்ன நடக்கும்?. உடல் சூடாகும் அல்லவா!. அதேநேரம் நெருப்பை விட்டு சற்று தொலைவு விலகிச் சென்றால் உடல் குளிரும் அல்லவா? இதுதான் இயல்பு. ஆனால், இயற்கைக்கு முரணான இயல்புடன் கூடியவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என வள்ளுவன் ஆச்சர்யம் மேலிட சொல்கிறான். உலகளந்த வள்ளுவனுக்கு,