Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Raja

ஆர்.கே. நகர்: மு.க.ஸ்டாலின் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்!

ஆர்.கே. நகர்: மு.க.ஸ்டாலின் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேர்தல் அரசியல் களத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவருடைய வியூகங்களும் களப்பணிகளும் காட்டுகின்றன. சமூக வலைத்தளங்களிலும் அவருடைய செயல்பாடுகள் ரொம்பவே கேலிக்குள்ளாகி இருக்கின்றன.  திராவிட இயக்கத்தின் சித்தாந்தங்களை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச்செல்லக்கூடிய தலைவராக மு.க.ஸ்டாலின் பார்க்கப்படுகிறார். மேயர், எம்எல்ஏ, எதிர்க்கட்சித் தலைவர் என அரசியல் படிநிலைகளிலும், இளைஞரணி செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என கட்சிக்குள்ளும் அவருடைய வளர்ச்சி நின்று நிதானமாகவே இருந்து வந்திருக்கிறது. சசிகலாவை உடன்பிறவா சகோதரியாக ஏற்றுக்கொண்டதாலேயே அவர் கைக்காட்டிய மன்னார்குடி பரிவாரங்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகளை வாரிக்கொடுத்த ஜெயலலிதா போல், இந்திய அரசியலின் ஆகப்பெரும் தலைவரான கருணாநிதி தன் மகன் மு.க.ஸ்டாலினுக்கு அப...
2ஜி வழக்கில் தீர்ப்பு அளித்த  நீதிபதி ஓ.பி.சைனி யார்?;  “ஊழலுக்கு எதிரான கறார் கந்தசாமியாம்”!!

2ஜி வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி ஓ.பி.சைனி யார்?; “ஊழலுக்கு எதிரான கறார் கந்தசாமியாம்”!!

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2ஜி அலைக்கற்றை வழக்கில் தீர்ப்பு அளித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, ஊழலுக்கு எதிராக ரொம்பவே கறார் காட்டக்கூடிய நீதிபதி என்றும், காவல்துறையில் உதவி ஆய்வாளராக இருந்து நீதித்துறைக்கு வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை அறிக்கை சமர்ப்பித்தது. இது தொடர்பாக அப்போது கூட்டணியில் இருந்த திமுக அமைச்சர் ஆ.ராஜா, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வந்தது. மத்திய கணக்குத் தணிக்கைத்துறை ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறியிருந்தாலும், சிபிஐ தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட குற்...