Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Public Health Department

மக்கள் டெங்குவால் அவதிப்படும்போது உங்களுக்கு கொண்டாட்டம் ஒரு கேடா?: இபிஎஸ், ஓபிஎஸ் மீது பாய்ச்சல்

மக்கள் டெங்குவால் அவதிப்படும்போது உங்களுக்கு கொண்டாட்டம் ஒரு கேடா?: இபிஎஸ், ஓபிஎஸ் மீது பாய்ச்சல்

அரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்
தமிழகமே டெங்கு காய்ச்சலால் முடங்கிப்போகும் அச்சத்தில் இருக்க, அரசு புகழ்பாடும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கள் தேவைதானா? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நெட்டிஸன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த நான்கு மாதஙங்களுக்கு மேலாகவே தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த சில நாள்களில் டெங்கு பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பொது சுகாதாரப்பணிகள் துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் இளங்கோ, கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி 250 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கலாம் என்று ஒரு தகவலைச் சொன்னார். ஆனால், டெங்கு மரணங்களை அரசு திட்டமிட்டு மறைத்து வருவதாகவும் அவர் சந்தேகம் தெரிவித்து இருந்தார்.