Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: police custody

விவசாயியை எஸ்ஐ அடித்து கொன்ற வழக்கு; ஆத்தூர் மாஜிஸ்ட்ரேட் விசாரணை!

விவசாயியை எஸ்ஐ அடித்து கொன்ற வழக்கு; ஆத்தூர் மாஜிஸ்ட்ரேட் விசாரணை!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், காவல்துறை எஸ்ஐ விவசாயியை அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து ஆத்தூர் நீதித்துறை நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எடப்பட்டி பதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45). விவசாயி. இவரும், இவருடைய நண்பர்கள் சிவன்பாபு, ஜெயசங்கர் ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் ஜூன் 22ம் தேதி மாலை, பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச்சாவடி வழியாக சென்றனர். அப்போது மூவரும் மது போதையில் இருந்தனர். இந்த சோதனைச்சாவடியில் வனத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி ஏத்தாப்பூர் காவல்நிலைய சிறப்பு எஸ்ஐ பெரியசாமி மற்றும் சில காவலர்களும் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.   காவல்துறையினர் அவர்களுடைய வாகனத்தை சோதனையிட முயன்றபோது, முருகேசன் அவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இரு தரப்பு
சேலத்தில் ஒரு சாத்தான்குளம்; விவசாயியை அடித்துக் கொன்ற போலீஸ்!

சேலத்தில் ஒரு சாத்தான்குளம்; விவசாயியை அடித்துக் கொன்ற போலீஸ்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, குடிபோதையில் வந்த விவசாயியை காவல்துறை சிறப்பு எஸ்ஐ ஒருவர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எடப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45). விவசாயி. இவரும், இவருடைய நண்பர்கள் சிவன்பாபு, ஜெயசங்கர் ஆகியோரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஜூன் 22ம் தேதி மாலை பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடி வழியாகச் சென்றனர்.   சோதனைச் சாவடியில் ஏத்தாப்பூர் காவல்நிலைய சிறப்பு எஸ்ஐ பெரியசாமி மற்றும் காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முருகேசன் உள்ளிட்ட மூன்று பேரும் மது போதையில் இருந்துள்ளனர். வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் சிறப்பு எஸ்ஐ பெரியசாமி மற்றும் காவலர்கள், முருகேசனிடம் வாகனத்திற்கான ஆவணங்களைக் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால்
முன்னாள் துணைவேந்தர்  கணபதிக்கு 4 நாள் போலீஸ் காவல்

முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு 4 நாள் போலீஸ் காவல்

குற்றம், கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து கணபதியை பிப்ரவரி 6ம் தேதி முதல் பணி இடைநீக்கம் செய்வதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். கணபதியை கைதுக்குப் பின்னர் 20க்கும் மேற்பட்டோர் அவர் மீது புதிதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தனர். பணி நியமன விவகாரத்தில் கணபதி மட்டுமின்றி அரசியல் புள்ளிகளுக்கும், பிற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சிலருக்கும்கூட தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, கோவை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை கோவை ஊழல் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மி