Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: poisonous gas

ஆத்தூர் அருகே சேகோ ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!

ஆத்தூர் அருகே சேகோ ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆத்தூர் அருகே, சேகோ ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டியின் மேல் மூடியை திறந்தபோது விஷ வாயு தாக்கியதில் கூலித்தொழிலாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.   சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கெங்கவல்லி பள்ளக்காட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம் (65). அப்பகுதியில் சண்முகா சேகோ பேக்டரி என்ற பெயரில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் அம்மம்பாளையம் கண்ணகி நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் மணி என்கிற ஜெயச்சந்திரன் (35) கூலி வேலை செய்து வந்தார். அவருடன், பள்ளக்காட்டைச் சேர்ந்த மாது (55), காங்கமுத்து (50), கலியன் (48) ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.   ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிப்பதற்கான மரவள்ளிக் கிழங்குகளை அரைத்த பின்னர் வெளியேற்றப்படும் கழிவு நீரை தேக்கி வைக்க, 6
சேலம்: இதுதான் ஸ்மார்ட் சிட்டியின் லட்சணமா?; தொடரும் மாநகராட்சியின் அலட்சியம்!

சேலம்: இதுதான் ஸ்மார்ட் சிட்டியின் லட்சணமா?; தொடரும் மாநகராட்சியின் அலட்சியம்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டாலும், அதற்கான பூர்வாங்க தகுதிகளைக்கூட இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லை. இன்றும் திறந்தவெளி சாக்கடைக் கால்வாய்களுக்குள் எந்த வித பாதுகாப்பு கவசங்களுமின்றி மனிதர்களையே இறக்கிவிடும் அவலம் நீடிக்கிறது. மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என முதன்முதலில் 1993ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. பின்னர் அந்த சட்டத்தில் மேலும் சில விதிகள் சேர்க்கப்பட்டு, 2013ல் புதிய சட்டமும் இயற்றப்பட்டது. ஆனாலும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி இறக்கும் நிகழ்வுகளில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளன. இதுபோன்ற மரணங்களில் தமிழகத்தின் பாதிப்பு மட்டுமே 44 சதவீதம் என்கிறது ஓர் ஆய்வு.   கடந்த நான்கு ஆண்டுகளில் மனிதக் கழிவகற்றும் பணிகளில் ஈடுபட்டபோது விஷ வாயு தாக்கி 30 பேர் பலியாகியுள்ளதாக அதிக