Saturday, December 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: pink movie

நேர்கொண்ட பார்வை – சினிமா விமர்சனம்! ‘ஊசியைக் கேட்டுத்தான் நூலை நுழைக்கிறோமா?’

நேர்கொண்ட பார்வை – சினிமா விமர்சனம்! ‘ஊசியைக் கேட்டுத்தான் நூலை நுழைக்கிறோமா?’

சினிமா, முக்கிய செய்திகள்
பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காலங்காலமாக நம் சமூகத்தில் கெட்டித்தட்டிப்போன பாலபாடங்களை நகல் எடுத்து எம்ஜிஆர் முதல் கமல், ரஜினி, விஜய் வரை தமிழின் அத்தனை மாஸ் ஹீரோக்களும் தங்கள் படங்களில் பெண்களுக்கு வகுப்பெடுத்து வந்த நிலையில், முதன்முதலாக பெண்ணை சக மனுஷியாகவும், அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்தாலே போதும் என்ற கருத்தை அஜித்குமார் என்ற மாஸ் ஹீரோ மூலமாக அழுத்தமாக பதிவு செய்திரு க்கிறது, 'நேர்கொண்ட பார்வை'. கடந்த 2016ம் ஆண்டு ஹிந்தியில் அமிதாபச்சன், டாப்ஸி நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'பிங்க்' படத்தின், அதிகாரப்பூர்வ மறு ஆக்கம்தான் 'நேர்கொண்ட பார்வை'. பெண்ணியம்தான் இப்படத்தின் பேசுபொருள். பெண்ணியம் என்றாலே, முண்டாசுக்கவிஞன் பாரதியை ஒதுக்கிவிட்டு நாம் அடுத்த அடி நகர முடியாதல்லவா? அதுதானோ என்னவோ, இப்படத்திற்கு 'நேர்கொண்ட பார்வை' என்ற தலைப்பைச் சூட்டியிர...