கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்!
திராவிட சிந்தனையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முகமாகவே கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகள் அமையும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் பலமாக உருவாகி உள்ளன.
ஜல்லிக்கட்டு போராட்டம் வலுப்பெற்ற நேரத்தில் இருந்தே கமலின் அரசியல் விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் ரொம்பவே 'வைரல்' ஆகி வருகின்றன. பல படங்களில், கமல் பேசிய முற்போக்கு வசனக் காட்சிகளை அவருடைய ரசிகர்கள் தேடிப்பிடித்து 'வைரல்' ஆக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாக்களில் அவர் எந்தளவுக்கு திராவிடம் பேசினாரோ, அதற்கு நிகராக வைணவக் கருத்துகளையும், கடவுள் மீதான நம்பிக்கைகளையும் எதிர் பாத்திரங்கள் மூலம் வார்த்தெடுத்திருக்கிறார். ஒருவேளை, தன் கருத்துகளை ஆழமாகச் சொல்வதற்காக அத்தகைய பாத்திரங்களை சித்தரித்திருக்கலாம். அல்லது, வணிக நோக்கமாக இருக்கலாம். எனினும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கமல்ஹாசன், பெரியாரிஸத்தையோ, பொதுவ...