சசிகலாவை வறுத்தெடுக்கும் ‘மீம்’ கிரியேட்டர்கள்!
அவசரகால பரோல் விடுப்பில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கிண்டலடித்து நெட்டிஸன்கள் மீம்களை பதிவிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்கள் முழுவதும் சசிகலா பற்றிய மீம்களே அதிகளவில் வைரல் ஆகி வருகின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். கைதி எண்: 9234.
அவருடைய கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இரு நாள்களுக்கு முன்பு, கல்லீரல், சிறுநீரகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரைக் காண்பதற்காக அவசரகால பரோல் விடுப்பில் இன்று (அக். 6) சிறையில் இருந்து விடுவிக்கப்பட...