சசிகலாவுக்கு பரோல் கிடைக்காதது ஏன்?; பரபரப்பு தகவல்கள்
சொத்து வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
நாளுக்கு நாள் அவருடைய உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருபுறம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
நடராஜனை பார்ப்பதற்காக, 15 நாள்கள் பரோல் விடுப்பில் செல்ல அனுமதி கேட்டு சசிகலா சிறைத்துறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்து இருந்தார். இன்று (அக்டோபர் 3) பரோல் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பரோலில் செல்வதற்கான தகுதிகள் இல்லை என்றுகூறி சிறைத்துறை நிர்வாகம் அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. சில தொழில்நுட்ப காரணங்களால் ...