சசிகலாவுக்கு ‘வாய்ப்பூட்டு’; 5 நாள் மட்டும் ‘பரோல்’
சொத்து வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருடைய கணவர் நடராஜனுக்கு, சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரு நாள்களுக்கு முன் அவருக்கு கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
கணவரை காண்பதற்காக 15 நாள்கள் பரோல் விடுப்பில் செல்ல அனுமதி கேட்டு கர்நாடகா சிறைத்துறைக்கு சசிகலா விண்ணப்பித்து இருந்தார். சில தொழில்நுட்ப காரணங்களால் அப்போது பரோலில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சில ஆவணங்களும் போதிய அளவில் இல்லை என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து மீண்டும் நேற்று புதிய பரோல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலித்த கர்நாடகா சிறைத்துறை, தமிழக காவல்துறையிடம் சசிகலாவுக்கு பரோல் அளிப்பது குறித்து கருத்து கேட்டது. அத...