Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Pakoda

ஜீயர் உண்ணாவிரதமும் மோடியின் பக்கோடாவும்!

ஜீயர் உண்ணாவிரதமும் மோடியின் பக்கோடாவும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் பாஜக தங்கள் இருப்பை நிலைநிறுத்துவதற்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் தவிடுபொடியாகிக் கொண்டே போவதை கிண்டலடித்து, சமூகவலைத்தளங்களில் பலர் கேலியான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். நரேந்திர மோடியின் 'பக்கோடா' முதல் ஜீயர் உண்ணாவிரதம் வரை ஒவ்வொன்றையும் முடிச்சுப்போட்டு கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.   மத்தியில் அசுர பலத்தில் இருக்கும்போதே, தமிழகத்திலும் முக்கிய கட்சிகளின் வரிசையில் வந்துவிட வேண்டும் என்றுதான் பாஜக ரொம்பவே மெனக்கெடுகிறது. ஆனால், அதன் ஒவ்வொரு முயற்சியும் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாகி விடுகிறது. சாரணர் தேர்தல் முதல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவிடம் தோற்றது வரை பாஜகவின் பலம் என்ன என்பதை தமிழ்நாடே அறியும். அவர்கள் வெற்றி என்பதெல்லாம் இபிஎஸ், ஓபிஎஸ் கும்பலை வளைத்துப் போட்டது மட்டுமே. மங்குனி அமைச்சர்களுக்கும் விழுந்து வணங்குவதற்கு பாத
”பிச்சை எடுப்பதும் தொழில்தானே!” – மோடியின் ‘பக்கோடா’ பேச்சுக்கு ப.சிதம்பரம் எதிர்வினை

”பிச்சை எடுப்பதும் தொழில்தானே!” – மோடியின் ‘பக்கோடா’ பேச்சுக்கு ப.சிதம்பரம் எதிர்வினை

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு விவகாரங்களில் பாஜகவின் கொள்கைகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ப.சிதம்பரம் கடுமையான சாடி வருகிறார். அவருடைய கருத்துகள், கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தாக காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களிலும், பொதுவெளிகளிலும் ப.சிதம்பரம் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அண்மையில் ஒரு தனியார் டிவி சேனலுக்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, ''பக்கோடா விற்பவர்கள் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். அதுவும் ஒரு வேலைதானே?. அதைச் செய்பவர்களை வேலை இல்லை என்று எப்படி கணக்கில் கொள்ள முடியும்?'' என்றார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது நரேந்திர மோடி, பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதெல்லாம் அவருடைய வழக்கமான 'ஜூம்லா' (தேர்த