Saturday, December 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: optional petition

திமுகவில் ராசிபுரம் தொகுதிக்கு முதல் விருப்ப மனு தாக்கல்!

திமுகவில் ராசிபுரம் தொகுதிக்கு முதல் விருப்ப மனு தாக்கல்!

அரசியல், முக்கிய செய்திகள்
திமுக சார்பில் ராசிபுரம்  தனித்தொகுதியில் போட்டியிட  மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த  ஒன்றியக்குழு 1வது வார்டு  கவுன்சிலரின் கணவர் முருகேசன், முதல் நபராக ஞாயிற்றுக்கிழமை (பிப். 21) விருப்ப மனு தாக்கல் செய்தார்.   தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, வழக்கத்தை விட முன்னதாகவே திமுக, அதிமுக கட்சிகள் தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டன.   இந்நிலையில், திமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்பமனுக்கள் பெறும் பணிகளையும் திமுக பிப். 17ம் தேதி தொடங்கியது. 28ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டப்பேரவைத் தனித்தொகுதியில் போட்டியிட இம்முறை 20க்கும் மேற்பட்டோர் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும், விருப்பமனு படிவம் ...