Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: operation

“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி!

“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி!

அரசியல், இந்தியா, கோயம்பத்தூர், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய வருமானவரி சோதனையை இன்றைய (நவம்பர் 9, 2017) தினம் சந்தித்திருக்கிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டிடிவி தினகரன் உறவுகளை குறி வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த சோதனைதான் அனைத்து ஊடகங்களிலும் 'பிக் பிரேக்கிங்' சேதி. சசிகலாவின் நேரடி உறவுகளான நடராஜன், திவாகரன், மகாதேவன், சுந்தரவதனம், டிடிவி தினகரன், விவேக் ஜெயராமன், ஜெயானந்த், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மருத்துவர் வெங்கடேஷ், மருத்துவர் சிவக்குமார் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் பிரதான சோதனைக் களங்களாகின. இவற்றுடன் ஜெயா டிவி, டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை, கிருஷ்ணபிரியாவின் என்ஜிஓ அலுவலகங்களும் தப்பவில்லை. மன்னார்குடி கும்பலின் ஆதரவாளர்களான பெங்களூர் புகழேந்தி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினரும் வழக்கறிருமான நாமக்கல் செந்தில், கோவை மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் உதவி...
ஹெர்னியா அச்சம் வேண்டாம்! டாக்டர் சொல்வதை கேளுங்க…

ஹெர்னியா அச்சம் வேண்டாம்! டாக்டர் சொல்வதை கேளுங்க…

அலோபதி, சேலம், மருத்துவம்
மருத்துவமனைகளில் அதிகளவில் நடக்கும் அறுவை சிகிச்சைகளில் ஒன்று, குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சை. பெண்களைவிட அதிகளவில் ஆண்களே ஹெர்னியா பிரச்சினைக்கு ஆளாகின்றனர். இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? தீர்வுகள் குறித்து விளக்குகிறார், சேலம் டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை மருத்துவர் வையாளி ராமு.   குடலிறக்கம் (ஹெர்னியா) என்றால் என்ன?: பலரும் கருதுவதுபோல் குடலிறக்கம் எனப்படும் ஹெர்னியா, ஒரு நோய் அல்ல. அது, உடல் பகுதியில் ஏற்படும் ஒரு பழுது. அவ்வளவுதான். வயிற்றுப்பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து இருக்கும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக்கொண்டு இறங்கி விடும். இதைத்தான், 'ஹெர்னியா', அதாவது 'குடல் இறக்கம்' என்கிறோம்.   அறிகுறிகள்?   வயிறு வ...