Sunday, March 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: ONGC

சேலம் மாணவி  வளர்மதி விடுதலை

சேலம் மாணவி வளர்மதி விடுதலை

அரசியல், கோயம்பத்தூர், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குண்டர் தடுப்பு சட்டத்தில், கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சேலம் மாணவி வளர்மதி இன்று (செப். 7) மாலை பிணையில் விடுதைல செய்யப்பட்டார். சேலம் பள்ளிக்கூடத்தானூரைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி. பெரியார் பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்து வந்தார். இயற்கை பாதுகாப்புக்குழு என்ற அமைப்பின் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்த அமைப்பின் சார்பில் நெடுவாசல் ஹைட்ரோகார்பன், கதிராமங்கலம் ஓஎன்ஜிசி திட்டங்களைக் கண்டித்து மக்களிடம் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வந்தார். கடந்த ஜூலை 12ம் தேதி, சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகில், கதிராமங்கலம் பிரச்னை தொடர்பாகன மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருந்தார். அவர் அரசுக்கு எதிராக மாணவர்களை போராடத் தூண்டுவதாகக் கூறி, சேலம் மாநகர காவல்துறையினர் கைது செய்தனர். அடுத்த சில நாள்களில், நக்சல், மாவோயிஸ்ட...