Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: nomination

அமமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க திட்டம்?

அமமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க திட்டம்?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் டி.டி.வி.தினகரனின் அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம் போட்டியிடுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பொருத்தவரை, இந்த தொகுதியை சிந்தாமல் சிதறாமல் கைப்பற்றி விட வேண்டும் என்று தனது பரிவாரங்களை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார். இந்த தொகுதியில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுக்கு இருக்கும் கணிசமான வாக்குகள் மூலம், அதிமுக வேட்பாளரை எளிதில் வெற்றி பெற வைத்துவிடலாம் என்றும் ஆளும்தரப்பு கணக்குப் போடுகிறது. ஆனால், அமமுக சார்பில் களம் இறங்கியுள்ள முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம், பிரதான எதிர்க்கட்சியான திமுகவைக் காட்டிலும் கடும் சவாலாக விளங்குவார் என எடப்பாடி தரப்பினரே சொல்கின்றனர். ஏனெனில் எஸ்.கே.செல்வம், சேலம் மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகு
சேலம்: அதிமுக வேட்பாளருக்கு பாமக ‘டிக்டேட்’!

சேலம்: அதிமுக வேட்பாளருக்கு பாமக ‘டிக்டேட்’!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுக வேட்பாளர், பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறியபோது, அவரை மேற்கொண்டு பேச விடாமல் பாமக நிர்வாகி அருள் அழைத்துச்சென்றது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் மக்களவை தொகுதியில் திமுக - அதிமுக நேரடியாக மோதுகிறது. கடந்த 22ம் தேதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன், திங்கள்கிழமை (மார்ச் 25, 2019) சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தனது பெயர் ராசி, நட்சத்திரம், நல்லநேரம் பார்த்து குளிகை காலத்தில் பகல் 2.40 மணியளவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக எம்எல்ஏ வெங்கடாஜலம் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் அருள் (பாமக), ராதாகிருஷ்ணன் (தேமுதிக), கோபிநாத் (பாஜக) ஆகியோர் வேட்புமனு தாக்கலின்போது உடன் இருந்தனர்.   முன்னதாக, சேலம