Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: National Scholarship Division

டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை!

டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
(தகவல்)   'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பதுதான் அவ்வை வாக்கு. பொருளாதார நெருக்கடிகள் கல்வி பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு எந்த விதத்திலும் தடைக்கல்லாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே, மத்திய அரசு உதவித்தொகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. மத்திய அரசின் பல உதவித்தொகைத் திட்டங்கள் மாணவர்களுக்கு தெரிவதில்லை அல்லது கல்வி நிலையங்கள் அதுபற்றி பெரிதாக அக்கறை காட்டுவதில்லை.   அது என்ன திட்டம்? பிளஸ்-2 முடித்துவிட்டு, நடப்புக் கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்.   தகுதிகள் என்னென்ன?:   1. பிளஸ்-2வில் 80 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்   2. பிளஸ்-2வை பள்ளியில் சேர்ந்து பயின்றிருக்க வேண்டும். தனித்தேர்வராகவோ, தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலமோ படித்திர