Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Meme

ஆர்.கே.நகர்: நோட்டாவிடம் மண்டியிட்ட பாஜக; மீம் கிரியேட்டர்கள் ‘கிழி கிழி’

ஆர்.கே.நகர்: நோட்டாவிடம் மண்டியிட்ட பாஜக; மீம் கிரியேட்டர்கள் ‘கிழி கிழி’

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவைக் காட்டிலும் மிகக்குறைவான வாக்குகள் பெற்று மண்ணைக் கவ்விய பாஜகவை, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மீம் கிரியேட்டர்கள் கிண்டலடித்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள் நேற்று (டிசம்பர் 24, 2017) எண்ணப்பட்டன. சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மதுசூதனனைத் தவிர திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். தமிழக தேர்தல் களம் எப்போதுமே திமுக, அதிமுக என இருதுருவ அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் பொருத்தவரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக
குஜராத் தேர்தல் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்குமா?; பாஜகவை ‘தாளிக்கும்’ மீம் கிரியேட்டர்கள்!

குஜராத் தேர்தல் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்குமா?; பாஜகவை ‘தாளிக்கும்’ மீம் கிரியேட்டர்கள்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குஜராத், ஹிமாச்சல் பிரதேச மாநில தேர்தல் முடிவுகளின் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்ற பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோரை மீம் கிரியேட்டர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். தமிழகத்தில் ஒருபோதும் மதவாத அரசியல் எடுபடாது என்றும் சூடாக பதிலடி கொடுத்துள்ளனர். நடந்து முடிந்த குஜராத் மற்றும் ஹிமாச்சல்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஒரு வாக்கு அல்லது ஒரு தொகுதி முன்னிலை பெற்றாலும் வெற்றிதான். அதனால் வேண் டுமானால் தேர்தல் வெற்றியை பாஜக கொண்டாடலாமே தவிர, சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் வெற்றி அல்ல. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில். குஜராத் மாநிலத்தில் ஒட்டுமொத்த காபினெட் அமைச்சர்களையும் களமிறக்கி, தேர்தல் வேலை பார்த்தது பாஜக. காங்கிரஸின் மணிசங்கர அய்யர், பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு தன்னை கொல்ல சதி செய்வதாகவெல்லாம் உச்சக
திமுகவுக்கு வைகோ ஆதரவு; கதற விடும் மீம் கிரியேட்டர்கள்!

திமுகவுக்கு வைகோ ஆதரவு; கதற விடும் மீம் கிரியேட்டர்கள்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மதிமுக தலைவர் வைகோ சொன்னாலும் சொன்னார், திமுக கூடாரத்தில் இருந்தே பலர் வைகோ ஆதரவை கிண்டலடித்து மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர். ஆதரவை விலக்கிக் கொள்ளச்சொல்லும்படியும் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர். சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகளுடன் டிடிவி தினகரனும் சுயேட்சையாக களம் இறங்குகிறார். இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருது கணேஷூக்கு ஏற்கனவே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பாக மதிமுகவும் திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் வைகோ திடீரென்று அறிவித்தார். திமுக தரப்பில் இருந்து ஆதரவு கோரி தூது அனுப்பப்பட்டதா அல்லது அவரே தன்னிச்சையாக
காமெடி டைம்: பெயர் – ஹெச் ராஜா; உபதொழில் – கலவரமூட்டுவது!

காமெடி டைம்: பெயர் – ஹெச் ராஜா; உபதொழில் – கலவரமூட்டுவது!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து திமுகவோ, அதிமுகவோ அல்லது ஏனைய பிற அரசியல் கட்சிகளோ அரசியல் செய்ய இப்போதைக்கு தேவை இல்லை என்றே தோன்றுகிறது. அந்தளவுக்கு இளைஞர்கள் மத்தியில் அக்கட்சி கடும் அதிருப்தியை சம்பாதித்து இருக்கிறது. அதற்கு, அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போன்றோருக்கு குவியும் எதிர்வினைகளே சான்று. இளைஞர்கள் மொழியில் சொல்வதென்றால், அவர்கள் எதைச்சொன்னாலும் அதை தங்கள் இஷ்டத்துக்கு கிழி கிழினு கிழித்து தொங்கவிடுவது அல்லது மரண கலாய் செய்வது என்ற ரீதியில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சட்டப்பேரவையில், உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பிரநிதியைக்கூட கொண்டிராத பாஜக, தங்கள்¢ இருப்பை பதிவு செய்ய விஜய், கமல்ஹாசன் போன்றோர் மீதான கணைகளை வீசுகிறது. எதை எதிர்பார்த்து அந்தக் கட்சி இவற்றையெல்லாம் செய்து வருகிறதோ, அதற்கு மேலாகவே அக்கட்சி இப்போது அற
சசிகலாவை வறுத்தெடுக்கும் ‘மீம்’ கிரியேட்டர்கள்!

சசிகலாவை வறுத்தெடுக்கும் ‘மீம்’ கிரியேட்டர்கள்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அவசரகால பரோல் விடுப்பில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கிண்டலடித்து நெட்டிஸன்கள் மீம்களை பதிவிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்கள் முழுவதும் சசிகலா பற்றிய மீம்களே அதிகளவில் வைரல் ஆகி வருகின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். கைதி எண்: 9234. அவருடைய கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இரு நாள்களுக்கு முன்பு, கல்லீரல், சிறுநீரகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரைக் காண்பதற்காக அவசரகால பரோல் விடுப்பில் இன்று (அக். 6) சிறையில் இருந்து விடுவிக்கப்பட