Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Marina

திருமுருகன் காந்தி மீதான ‘குண்டாஸ்’ ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு:  “தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக”

திருமுருகன் காந்தி மீதான ‘குண்டாஸ்’ ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு: “தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக”

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, பல்வேறு அமைப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ''தமிழகத்தை தில்லிக்கு விற்கும் தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக'' என்று அவரை வரவேற்றுள்ளனர். தமிழக அரசுக்கு எதிராக, குறிப்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுபவர்களை காவல்துறையினர் கைது செய்வதும், அவர்கள் மீது திட்டமிட்டு குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியும் சம்பவங்களும் நடந்து வருகிறது. தமிழ், தமிழர் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது மே 17 இயக்கம். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, 'தமிழ், தமிழர், தமிழர் உரிமைகள் என்ற மு-ழக்கங்களை ஒழித்துக் கட்டினால்தான் தமிழகத்தில் இந்து, இந்துத்துவம் என்ற பாசிச கொள்கைகளை வளர்க்க முடியும் என்று பாஜக, ஆர்எஸ்எஸ் நம
நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

கல்வி, கோயம்பத்தூர், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, திருவாரூர், முக்கிய செய்திகள், விழுப்புரம்
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பரவலாக மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. உள்கட்சி பிளவுகளால், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவே தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழக அரசு, போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் கையறு நிலையில் இருக்கிறது. முத்துக்குமார், செங்கொடி ஆகியோரின் உயிர் தற்கொடைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதேபோல், மருத்துவப் படிப்பு கானலான விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணம் காரணமாக, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. கடந்த சில நாள்களாகவே வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக 'மெரீனாவில் ஒன்றுகூடுவோம்' என்ற பெயரில் தகவல்கள் பரவின. இதனால் உஷார் அடைந்த தமிழக காவல்துறை, மெரீனா கடற்கரையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. கடற்கரை பகுதியில் குழுக்களாக சுற்றுவோ