Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: legislation

சட்டப்பேரவை: மு.க.ஸ்டாலின் வெளிநடப்பும் டிடிவி தினகரன் வருகையும்!

சட்டப்பேரவை: மு.க.ஸ்டாலின் வெளிநடப்பும் டிடிவி தினகரன் வருகையும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து அடிக்கடி வெளிநடப்பு செய்யும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டலடித்தும், முதன்முதலில் எம்எல்ஏவாக பேரவைக்குள் காலடி வைத்த டிடிவி தினகரனை பாராட்டியும் ட்விட்டரில் பலர் 'மீம்'கள் பதிவிட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 8, 2017) தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றார் பன்வாரிலால் புரோஹித். அவர் உரையாற்றும் முதல் கூட்டத்தொடர் இது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதி முதன்முதலில் இடைத்தேர்தலைச் சந்தித்தது. அதில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற டிடிவி தினகரன், எம்எல்ஏ ஆக காலடி வைக்கும் முதல் கூட்டத்தொடர். மக்களவை, மாநிலங்களவை எம்பியாக இருந்த டிடிவி தினகரன் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு, மக்கள் பிரதிநிதியாக அவர் இப்போது சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார்.
திருமுருகன் காந்தி மீதான ‘குண்டாஸ்’ ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு:  “தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக”

திருமுருகன் காந்தி மீதான ‘குண்டாஸ்’ ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு: “தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக”

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, பல்வேறு அமைப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ''தமிழகத்தை தில்லிக்கு விற்கும் தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக'' என்று அவரை வரவேற்றுள்ளனர். தமிழக அரசுக்கு எதிராக, குறிப்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுபவர்களை காவல்துறையினர் கைது செய்வதும், அவர்கள் மீது திட்டமிட்டு குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியும் சம்பவங்களும் நடந்து வருகிறது. தமிழ், தமிழர் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது மே 17 இயக்கம். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, 'தமிழ், தமிழர், தமிழர் உரிமைகள் என்ற மு-ழக்கங்களை ஒழித்துக் கட்டினால்தான் தமிழகத்தில் இந்து, இந்துத்துவம் என்ற பாசிச கொள்கைகளை வளர்க்க முடியும் என்று பாஜக, ஆர்எஸ்எஸ் நம