கேப் டவுன் டெஸ்ட்: தென்னாப்ரிக்காவிடம் சுருண்டது இந்தியா!
தென்னாப்பிரிக்கா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா அபாரமாக வெற்றி பெற்றது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, வெற்றிக்கு வழிகோலினார்.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் கடந்த 5ம் தேதி தொடங்கியது.
தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களும், இந்தியா 209 ரன்களும் எடுத்து இருந்தது. இதைத் தொடர்ந்து, 77 ரன்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் மழ...